
சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி பட்டமளிப்பு விழா;
15 நிமிடங்களில் 6,600 மரக்கன்றுகள் நட்டு இந்திய சாதனை
எழுத்தாளர் Sivagangai Admin · 15 ஜூன், 2026
2 நிமிட வாசிப்பு
காரைக்குடி, ஜூன் 15 -
காரைக்குடி அருகே விசாலயன்கோட்டையில் அமைந்துள்ள சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 6-ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழாவும், இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் பதிவு நிகழ்ச்சிக்காக 15 நிமிடங்களில் 6,600 மரக்கன்றுகள் நடும் விழாவும் நடந்தது.
கல்லூரி தலைவர் முனைவர் சேது குமணன் தலைமை வகித்தார். முதல்வர் பேபி ராணி வரவேற்று பேசினார். விழாவின் சிறப்பு விருந்தினராக மைசூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த மகாராஜா ஸ்ரீ யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் ( நாடாளுமன்ற உறுப்பினர் மைசூர் குடகு தொகுதி) பட்டமளிப்பு உரையாற்றினார். அவர் பேசுகையில், மாணவர்கள் தங்களது அறிவு, திறன் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை ஒருங்கிணைத்து நாட்டின் முன்னேற்றத்திற்கும், நிலையான வளர்ச்சிக்கும் பங்களிக்க வேண்டும் என்றார்.
மியான்மர் குடியரசின் கௌரவத் தலைவர் பேராசிரியர் ஜெ. ரங்கநாதன், மருத்துவத் தரப்படுத்தல் துணைக்குழு மற்றும் யுனானி மருத்துவ ஆராய்ச்சிக்கான துணைக்குழுத் தலைவர் முனைவர் இராஜேந்திரன் ஆனைமுத்து, டிஜி அக்ரிகான் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தொடர்ந்து மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. கல்வி மற்றும் இணைப்பாடச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்குத் தங்கப் பதக்கங்கள், அறக்கட்டளை விருதுகள், சான்றிதழ்கள் மற்றும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது செ. அழகுமீனா மற்றும் ரா. சுபாஷினி ஆகியோருக்கு வழங்கப்பட்டது. கல்வி மற்றும் இணைப்பாடச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கியதற்காக சேது பாஸ்கரன் சிறப்புச் சான்றிதழ் விருது எஸ்.ஐரின் ஐஸ்டினாவிற்கு வழங்கப்பட்டது.
டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன், டாக்டர் பி. வசந்தராஜ் டேவிட், டாக்டர் சி.வி. சுப்பிரமணியன், டாக்டர் ரத்தன்லால், டாக்டர் கிரிகோர் மெண்டல், டாக்டர் ஜி.எஸ். ரந்தாவா மற்றும் டாக்டர் அமர்த்யா சென் ஆகியோரின் பெயர்களில் நிறுவப்பட்ட விருதுகளும், சேது ஐராணி அம்மாள் பெயரில் சிறப்புச் சான்றிதழ்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
முன்னதாக இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் பதிவு முயற்சியின் ஒரு பகுதியாக, கல்லூரி பண்ணை வளாகத்தில் 15 நிமிடங்களில் 6,600 மரக்கன்றுகள் நடப்பட்டது. மைசூர் மகாராஜா ஸ்ரீ யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF), ஸ்ரீ ராஜா ராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி அமராவதி புதூர், ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கல்லூரி அமராவதி புதூர், சேது ஐராணி மெட்ரிகுலேஷன் பள்ளி, கண்டரமாணிக்கம் சேது பாஸ்கரா தொழிற்பயிற்சி நிறுவனம் (ITI), கண்டரமாணிக்கம், எம்.ஏ.பி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி கண்டரமாணிக்கம் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி, விசாலையன்கோட்டை ஆகிய கல்வி மற்றும் நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் தன்னார்வலர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.
இந்நிகழ்வை இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் பதிவு மேலாளர் முனைவர் யு. இராஜேஷ், பொதுமேலாளர் முனைவர் பா. பாலசுப்பிரமணியன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். 15 நிமிடங்களில் 6,600 மரக்கன்றுகள் நடப்பட்ட சாதனையை உறுதிப்படுத்தி, இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனைச் சான்றிதழ் மற்றும் விருதுகளை வழங்கினர். மேலும், கல்வி, சமூகப் பொறுப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருவதற்காக, இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் "மாஸ்டர் மைண்ட் விருது" சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சிநிறுவனத்தின் தலைவர் முனைவர் சேது குமணனுக்கு வழங்கப்பட்டது.
இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?
மொத்த வாக்குகள்: 0
மேலும் படிக்க

வாக்குவாதம், கூச்சல் குழப்பத்துடன் தொடங்கிய காரைக்குடி மாநகராட்சி மன்ற கூட்டம்
திமுக உறுப்பினர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாததால் பரபரப்பு

பதவி இழக்கும் காரைக்குடி மேயர்
தொடர்ந்து 3 முறைமாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்காததால் தீர்மானம்

காரைக்குடியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி; மற்றொருவர் தீவிர சிகிச்சை
🗞 மற்ற செய்திகள்(17)
மாவட்ட செய்திதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கூட்டம்
31 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகாரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனையில் இலவச எலும்பு அடர்த்தி சோதனை முகாம்
31 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதேவகோட்டையில் குட்கா புகையிலை பறிமுதல்
30 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகுழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
29 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் விருது வழங்கினர்
29 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திஇன்ஃபான்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா
29 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்தி12.15 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டுக் கொடுத்த அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவுக்கு கோயில் நிர்வாகிகள் நன்றி
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் பயிலரங்கம்
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திராஜ ராஜன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ, தலையாரியை கைது செய்த லஞ்ச ஒழிப்பு துறை
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகுடும்ப பிரச்சனையில் ஆட்டோ, கார் பொருட்களை அடித்து நொறுக்கிய உறவினர்கள்
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை மேல்மருவத்தூர் சக்தி பீடம் கஞ்சி கலையம்
26 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திபோதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
25 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திபூலாங்குறிச்சி அரசு கல்லூரி ரத்ததான முகாம்
22 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை சேர்மன் தேசிய கொடி ஏற்றினார்
22 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் 24 மணி நேர குடிநீர் சப்ளை ஏழு இடங்களில் ஆழ்துளை கிணறுகள்
22 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திபணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட தனியார் டைல்ஸ் நிறுவனம்
21 ஆகஸ்ட், 2026