
சமுதாயத்தை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள் காரைக்குடியில் அமைச்சர் பிரபு புகழாரம்
எழுத்தாளர் Sivagangai Admin · 20 ஜூன், 2026
2 நிமிட வாசிப்பு
காரைக்குடி, ஜூன் 20-
2025-2026-ம் கல்வியாண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாவட்ட, மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா காரைக்குடியில் நடந்தது.
விழாவுக்கு கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி வரவேற்றார். இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் பிரபு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார். அவர் பேசுகையில், முன்னாள் மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாமுக்கு மாணவர்களிடம் உரையாடுவது மிகவும் பிடிக்கும். அவ்வாறு மாணவர்களிடம் பேசிக்கொண்டிருக்கையில், ஒரு மாணவர் கேட்டார், ‘‘வேற்றுமையில் ஒற்றுமை என்றால் என்ன? உங்கள் விளக்கத்தை கூறுங்கள்’’ என்றார்.
அதற்கு அவர், சிவசுப்பிரமணிய ஐயர் என்ற ஆசிரியரால் அடிப்படை கல்வி கற்று, அய்யாத்துரை சாலமோன் என்ற கிறிஸ்தவ ஆசிரியரால் அறிவியல் கற்பிக்கப்பட்டு, அப்துல்கலாம் என்ற நான் இந்திய ஜனாதிபதியாக பதவி வகிப்பதுதான் வேற்றுமையில் ஒற்றுமை என்றார்.
ஒரு ஆசிரியர் மாணவரை மட்டுமல்ல, சமுதாயத்தை உருவாக்குகிறவர்கள். நாட்டை ஆள்வதிலிருந்து, நிர்வகிப்பது வரை ஆசிரியர்களின் கைவண்ணம் உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் பல மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கியதில் ஆசிரியர்களுக்கு முக்கிய பங்குஉள்ளது. அந்த ஆசிரியர்களுக்கு மிக்க நன்றி. சிவகங்கை மாவட்டம் மாநில அளவில் 10-ம் வகுப்பில் முதலிடம், 12-ம் வகுப்பில் இரண்டாம் இடம் பெற்றுள்ளது. இதற்கு காரணமாகவும், அரும்பாடுபட்ட ஆசிரியர்களுக்கு நன்றி. பெருமை சேர்க்கும் கல்வியை மாணவர்களுக்கு கொடுத்துள்ளனர்.
அடுத்த முறையும் இதை விட சிறப்பாக செய்ய வேண்டும். 100 சதவீதமாக இருக்க வேண்டும் என்பது என் எண்ணம். மாநில அளவில் முதல் இடம் இரண்டாம் இடம் என்பதை சிவகங்கை மாவட்டத்திலிருந்து கொடுக்க வேண்டும். முதல்வரிசையில் எனக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள் உள்ளனர். ஒரு மாணவனாக என் ஆசிரியருக்கு நான் மரியாதை செலுத்துவதில் பெருமிதம் கொள்கிறேன். இந்த வாய்ப்பை கொடுத்த தமிழக முதல்வருக்கும் நன்றி, என்றார். தொடர்ந்து அவருக்கு கற்பித்து கொடுத்த செம்பனூர் அரசு பள்ளி முதுகலை இயற்பியல் ஆசிரியர் கணேசனை அழைத்து அவரை பெருமைப்படுத்தினார்.
அழகப்பா மெட்ரிக்., பள்ளயில் இயற்பியல் ஆசிரியராக கணேசன் பணியாற்றியபோது தற்போதைய அமைச்சர் பிரபு அவரிடம் கல்வி பயின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை சேர்ந்த 2500 பேருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருப்பத்தூர் எம்.எல்.ஏ., ஆர்.சீனிவாசசேதுபதி, சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் ஏ.குழந்தைராணி, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் டி.இளங்கோவன், மாவட்ட கல்வி அலுவலர்கள் தொடக்க நிலை தேவகோட்டை செந்தில்குமரன், தனியார் பள்ளிகள் வடிவேல், தொடக்க நிலை சிவகங்கை ராசேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். இடைநிலை மாவட்ட கல்வி அலுவலர் மாரிமுத்து நன்றி கூறினார்.
இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?
மொத்த வாக்குகள்: 0
மேலும் படிக்க

வாக்குவாதம், கூச்சல் குழப்பத்துடன் தொடங்கிய காரைக்குடி மாநகராட்சி மன்ற கூட்டம்
திமுக உறுப்பினர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாததால் பரபரப்பு

பதவி இழக்கும் காரைக்குடி மேயர்
தொடர்ந்து 3 முறைமாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்காததால் தீர்மானம்

காரைக்குடியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி; மற்றொருவர் தீவிர சிகிச்சை
🗞 மற்ற செய்திகள்(17)
மாவட்ட செய்திதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கூட்டம்
31 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகாரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனையில் இலவச எலும்பு அடர்த்தி சோதனை முகாம்
31 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதேவகோட்டையில் குட்கா புகையிலை பறிமுதல்
30 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகுழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
29 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் விருது வழங்கினர்
29 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திஇன்ஃபான்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா
29 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்தி12.15 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டுக் கொடுத்த அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவுக்கு கோயில் நிர்வாகிகள் நன்றி
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் பயிலரங்கம்
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திராஜ ராஜன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ, தலையாரியை கைது செய்த லஞ்ச ஒழிப்பு துறை
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகுடும்ப பிரச்சனையில் ஆட்டோ, கார் பொருட்களை அடித்து நொறுக்கிய உறவினர்கள்
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை மேல்மருவத்தூர் சக்தி பீடம் கஞ்சி கலையம்
26 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திபோதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
25 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திபூலாங்குறிச்சி அரசு கல்லூரி ரத்ததான முகாம்
22 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை சேர்மன் தேசிய கொடி ஏற்றினார்
22 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் 24 மணி நேர குடிநீர் சப்ளை ஏழு இடங்களில் ஆழ்துளை கிணறுகள்
22 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திபணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட தனியார் டைல்ஸ் நிறுவனம்
21 ஆகஸ்ட், 2026