
திரிஷா படத்தை மாநகராட்சி கூட்ட அரங்கில் வைக்க கோரி காரைக்குடியில் கவுன்சிலர் அடம்
எழுத்தாளர் Sivagangai Admin · 24 ஜூன், 2026
2 நிமிட வாசிப்பு
திரிஷா படத்தை மாநகராட்சி கூட்ட அரங்கில்
வைக்க கோரி காரைக்குடியில் கவுன்சிலர் அடம்
காரைக்குடி, ஜூன் 24-
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காரைக்குடி மாநகராட்சியில் முன்னாள் முதல்வர்கள் படம் மாற்ற வேண்டும் என்றும், திரிஷா படத்தை வைக்க வேண்டும் எனவும் கவுன்சிலர்கள் மாறி, மாறி சண்டையிட்டு அவையை கலகலப்பாக ஆக்கியதுடன் களேபரமாகவும் மாற்றி வருகின்றனர்.
காரைக்குடி மாநகராட்சி கூட்டம் இன்று மேயர் பொறுப்பு குணசேகரன் தலைமையில் தொடங்கியது. ஆணையாளர் பாலு முன்னிலை வகித்தார். கூட்டம் ஆரம்பித்ததும், மாநகராட்சியில் பணி ஒதுக்கப்பட்ட எந்த வேலையும் நடைபெறவில்லை என்று திமுக காங்கிரஸ் அதிமுக கவுன்சிலர்கள் அவை தொடங்குவதற்கு முன்பாகவே கூச்சலிட்டனர். மேலும், தற்போதைய முதலமைச்சர் விஜய் படம் மட்டும் மாமன்ற கூட்ட அரங்கில் தொங்க விடப்பட்டிருந்தது. இதையடுத்து அ.தி.மு.க., கவுன்சிலர்கள் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி படத்தையும், தி.மு.க., கவுன்சிலர்கள் மு.க., ஸ்டாலின் படம் வைக்க வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பினர். வேறு வழியின்றி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி, மு.க., ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படமும் வைக்கப்பட்டது.
இதில் பங்கேற்ற அதிமுக 27வது வார்டு மன்ற உறுப்பினர் பிரகாஷ் எந்த மனுவுக்கும் பணி நடைபெறவில்லை என்ற கூறி, பொறுப்பு மேயர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதில் பங்கேற்ற சுயேச்சை மாமன்ற உறுப்பினர் மெய்யர் வருங்கால முதல்வர் திரிஷா படத்தை வைக்க வேண்டும், இந்த வெற்றிக்கு அவர்தான் காரணம் என்று கோரிக்கையை எழுப்பிய தால் கலகலப்பு ஏற்பட்டது.
இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?
மொத்த வாக்குகள்: 0
மேலும் படிக்க

வாக்குவாதம், கூச்சல் குழப்பத்துடன் தொடங்கிய காரைக்குடி மாநகராட்சி மன்ற கூட்டம்
திமுக உறுப்பினர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாததால் பரபரப்பு

பதவி இழக்கும் காரைக்குடி மேயர்
தொடர்ந்து 3 முறைமாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்காததால் தீர்மானம்

காரைக்குடியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி; மற்றொருவர் தீவிர சிகிச்சை
🗞 மற்ற செய்திகள்(17)
மாவட்ட செய்திதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கூட்டம்
31 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகாரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனையில் இலவச எலும்பு அடர்த்தி சோதனை முகாம்
31 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதேவகோட்டையில் குட்கா புகையிலை பறிமுதல்
30 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகுழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
29 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் விருது வழங்கினர்
29 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திஇன்ஃபான்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா
29 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்தி12.15 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டுக் கொடுத்த அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவுக்கு கோயில் நிர்வாகிகள் நன்றி
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் பயிலரங்கம்
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திராஜ ராஜன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ, தலையாரியை கைது செய்த லஞ்ச ஒழிப்பு துறை
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகுடும்ப பிரச்சனையில் ஆட்டோ, கார் பொருட்களை அடித்து நொறுக்கிய உறவினர்கள்
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை மேல்மருவத்தூர் சக்தி பீடம் கஞ்சி கலையம்
26 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திபோதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
25 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திபூலாங்குறிச்சி அரசு கல்லூரி ரத்ததான முகாம்
22 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை சேர்மன் தேசிய கொடி ஏற்றினார்
22 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் 24 மணி நேர குடிநீர் சப்ளை ஏழு இடங்களில் ஆழ்துளை கிணறுகள்
22 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திபணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட தனியார் டைல்ஸ் நிறுவனம்
21 ஆகஸ்ட், 2026