தரமற்ற காலை உணவு , ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சாலை மறியல் போராட்டம்
அமைச்சர் பிரபு தொலைபேசி மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து கலைந்து சென்ற தூய்மை பணியாளர்கள்
எழுத்தாளர் Sivagangai Admin · 22 மே, 2026
2 நிமிட வாசிப்பு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சியில் 85 பேர் நிரந்தர தூய்மை பணியாளர்களாகவும், 185 பேர் ஒப்பந்த தூய்மை பணியாளர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். நிரந்தரமான பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை போன்று ஒரே மாதிரியான ஊதியத்தை வழங்க கோரி பலமுறை கோரிக்கை வைத்தும் ஊதியத்தை உயர்த்தி தரவில்லை என்றும் நிரந்தர தூய்மை பணியாளர்களுக்கு பல ஆண்டுகளாக பிடித்தம் செய்யப்பட்ட
பிஎஃப் (PF) பணம் வரவு வைக்கப்படவில்லை என்றும் தினந்தோறும் காலையில் துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கப்படும் உணவு மோசமாக உள்ளதாகவும் கெட்டுப்போன உணவை வழங்குவதாகவும், தூய்மை பணிக்கு வழங்கப்படும் வாகனங்கள் பழுதடைந்து உள்ளதாகவும் அதை பழுது நீக்கி நல்ல வாகனம் தர வேண்டும் என்றும் இறந்த தொழிலாளர்களுக்கு பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும் என பல்
வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி மாநகராட்சி ஆணையாளர் சங்கரன் வாகனத்தை சிறைபிடித்து காரைக்குடி - தேவகோட்டை பிரதான சாலையில் அமைந்துள்ள கொப்புடைய நாயகி அம்மன் கோவில் அருகே சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் அவர்களுடன் ஏ ஐ டி யு சி தொழிற்சங்கமும் போராட்டத்தில் பங்கேற்றனர். காவல்துறை சார்பில் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலை மறியல் போராட்டம் குறித்து அறிந்த அமைச்சர் டி கே பிரபு உடனடியாக தொழிற்சங்க நிர்வாகியிடம் தொலைபேசியில் தொடர்பு தூய்மை பணியாளர்களின் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு தூய பணியாளர்கள் கலந்து சென்றனர். கீழ் பணியாளர்களின் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டது.
இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?
மொத்த வாக்குகள்: 0
மேலும் படிக்க

வாக்குவாதம், கூச்சல் குழப்பத்துடன் தொடங்கிய காரைக்குடி மாநகராட்சி மன்ற கூட்டம்
திமுக உறுப்பினர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாததால் பரபரப்பு

பதவி இழக்கும் காரைக்குடி மேயர்
தொடர்ந்து 3 முறைமாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்காததால் தீர்மானம்

காரைக்குடியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி; மற்றொருவர் தீவிர சிகிச்சை
🗞 மற்ற செய்திகள்(17)
மாவட்ட செய்திதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கூட்டம்
31 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகாரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனையில் இலவச எலும்பு அடர்த்தி சோதனை முகாம்
31 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதேவகோட்டையில் குட்கா புகையிலை பறிமுதல்
30 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகுழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
29 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் விருது வழங்கினர்
29 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திஇன்ஃபான்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா
29 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்தி12.15 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டுக் கொடுத்த அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவுக்கு கோயில் நிர்வாகிகள் நன்றி
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் பயிலரங்கம்
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திராஜ ராஜன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ, தலையாரியை கைது செய்த லஞ்ச ஒழிப்பு துறை
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகுடும்ப பிரச்சனையில் ஆட்டோ, கார் பொருட்களை அடித்து நொறுக்கிய உறவினர்கள்
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை மேல்மருவத்தூர் சக்தி பீடம் கஞ்சி கலையம்
26 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திபோதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
25 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திபூலாங்குறிச்சி அரசு கல்லூரி ரத்ததான முகாம்
22 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை சேர்மன் தேசிய கொடி ஏற்றினார்
22 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் 24 மணி நேர குடிநீர் சப்ளை ஏழு இடங்களில் ஆழ்துளை கிணறுகள்
22 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திபணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட தனியார் டைல்ஸ் நிறுவனம்
21 ஆகஸ்ட், 2026