
காரைக்குடி சிறுவனின் பிறப்புறுப்பு அறுவை சிகிச்சை விவகாரம்: ‘மருத்துவர்கள் முறையாகவே சிகிச்சை அளித்தனர்
ஐ.எம்.ஏ தலைவர் டாக்டர் ஸ்ரீதர் பேட்டி
எழுத்தாளர் Sivagangai Admin · 10 ஜூன், 2026
3 நிமிட வாசிப்பு
காரைக்குடி, ஜூன் 10-
காரைக்குடியில் பிறப்புறுப்பு சிகிச்சையில் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில், மருத்துவர்கள் எந்த தவறும் செய்யவில்லை, மிக அரிதாக 10 லட்சத்தில் ஒரு நோயாளிக்கு ஏற்படும் ஒன்றாகும், என இந்திய மருத்துவ சங்க மாநில தலைவர் டாக்டர் ஸ்ரீதர் காரைக்குடியில் பேட்டியளித்தார்.
அவர் கூறியதாவது : மீனாட்சி சுந்தரம் என்பவரது மகன் செல்வன் சாய் ஹரிஷ் என்ற பத்து வயது சிறுவன் மரு. சோமசுந்தரம் அவர்களுடைய மருத்துவ மனையில் 21/05/26 அன்று ஆண் குறியில் ஒரு அறுவை சிகிச்சைக்காக காலை ஏழு மணி அளவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அன்று காலையே அனுபவமிக்க அறுவை சிகிச்சை நிபுணர் மரு. காமாட்சி சந்திரனால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மயக்க மருத்துவ இயல் நிபுணர் மரு. குலாம் அலி உடன் இருந்து சிகிச்சை மேற்கொண்டார். மேற்கூறிய மருத்துவர்கள் அனைவரும் அவர்கள் சார்ந்த துறைகளில் பல ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள். அறுவை சிகிச்சை நல்ல முறையில் நடந்து முடிந்த நிலையில் மறு நாள் 22/05/26 டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். அறுவை சிகிச்சை செய்த இடம் ஆரோக்கியமாகவே காணப் பட்டது. 26/05/26 அன்று இரவு 7.30 மணி அளவில் சிறுவன் மறு பரிசோதனைக்கு அழைத்து வரப் பட்டார். மருத்துவர் சோதித்து பார்த்த போது காயத்தில் இரத்த ஓட்டம் சீராக இல்லாதது கண்டு பிடிக்கப்பட்டது. உடனடியாக அவரை கே.எம்.சி மருத்துவமனை செல்ல பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் அவர்கள் மறுநாள் காலைதான் (27/05/26) கே.எம்.சி மருத்துவமனை சென்றார்கள். காயத்தை ஆய்வு செய்த போது இரத்த ஓட்டம் குறைவது உறுதி செய்யப் பட்டது. அதனை சரி செய்ய சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர் உதவி தேவை என்பதால் 28/05/26 அன்று மதுரையில் இதில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவரிடம் சென்று காண்பிக்க அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அவர்கள் அதை தவறாக புரிந்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவ மனைக்கு சென்றனர். அங்கு அவருக்கு ப்ளாஸ்டிக் அறுவை சிகிச்சை உட்பட சிறந்த சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது காயம் ஆறி வருகிறது. சிறுவன் சாய் ஹரிஷ்-க்கு செய்ய பட்ட அறுவை சிகிச்சை எளிதாகவும் எங்கும் பரவலாகவும் செய்யப் படும் சிகிச்சை ஆகும். அவருக்கு ஏற்பட்ட இந்த பிரச்சினை மிகவும் அரிதாக பத்து இலட்சம் நோயாளிகளில் ஒருவருக்கு ஏற்படும் ஒன்றாகும். இது திடீரென இரத்த ஓட்டம் குறைவதால் (vasospasm) உண்டாகும் ஒரு அரிதான அமைப்பு.
இதனால் சிறுவன் சாய் ஹரிஷ்-க்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் ஏற்பட்டுள்ள மன உளைச்சலுக்கு எங்கள் இந்திய மருத்துவ சங்கம் தன் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது. ஆனால் இந்த சிகிச்சையில் எங்கள் மருத்துவர்கள் எந்த ஒரு அலட்சியத்தையும் காட்டவில்லை என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். மிகவும் அரிதாக ஏற்படக்கூடிய இந்த பாதிப்பில் எந்த ஒரு தாமதத்தினையும் காட்டாமல் உயர் சிகிச்சை மேற்கொள்ளப் பட்டுள்ளது. மேலும் இந்த சிகிச்சையில் ஆண் குறி முழுமையாக நீக்கப் படவில்லை. ஒரு சிறு பகுதி மட்டுமே நீக்கப் பட்டு ப்ளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் நுண்ணிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட்டுள்ளது. நாளடைவில் ஆண் குறியில் ஏற்பட்டுள்ள இந்த குறைபாடு சீராகும் என்று சிறப்பு அறுவை சிகிச்சை செய்த நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். ஆண்குறி ஆற வேண்டும் என்ற அடிப்படையில் பதியம் செய்யப்பட்டுள்ளது. திசுக்கள் வளரும் வகையில் இது மேற்கொள்ளப்பட்டுள்ளது. முழுவதும் அகற்றப்படவில்லை. எனவே இந்த சிகிச்சையில் எந்த ஒரு அலட்சியத்தையும் எங்கள் மருத்துவர்கள் காட்டவில்லை என்று உறுதி கூறும் அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட சிறுவன் சாய் ஹரிஷ் மேலும் சிகிச்சை பெற எல்லாவிதமான உதவிகளையும் செய்ய சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் உடன் இருப்பார்கள் என்று கூறிக் கொள்கிறோம், என்றார்.
உடன் மருத்துவர்கள் சுரேந்திரன், காமாட்சி சுந்தரம், சோமசுந்தரம் மற்றும் பலர் இருந்தனர்.
இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?
மொத்த வாக்குகள்: 0
மேலும் படிக்க

வாக்குவாதம், கூச்சல் குழப்பத்துடன் தொடங்கிய காரைக்குடி மாநகராட்சி மன்ற கூட்டம்
திமுக உறுப்பினர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாததால் பரபரப்பு

பதவி இழக்கும் காரைக்குடி மேயர்
தொடர்ந்து 3 முறைமாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்காததால் தீர்மானம்

காரைக்குடியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி; மற்றொருவர் தீவிர சிகிச்சை
🗞 மற்ற செய்திகள்(17)
மாவட்ட செய்திதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கூட்டம்
31 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகாரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனையில் இலவச எலும்பு அடர்த்தி சோதனை முகாம்
31 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதேவகோட்டையில் குட்கா புகையிலை பறிமுதல்
30 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகுழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
29 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் விருது வழங்கினர்
29 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திஇன்ஃபான்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா
29 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்தி12.15 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டுக் கொடுத்த அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவுக்கு கோயில் நிர்வாகிகள் நன்றி
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் பயிலரங்கம்
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திராஜ ராஜன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ, தலையாரியை கைது செய்த லஞ்ச ஒழிப்பு துறை
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகுடும்ப பிரச்சனையில் ஆட்டோ, கார் பொருட்களை அடித்து நொறுக்கிய உறவினர்கள்
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை மேல்மருவத்தூர் சக்தி பீடம் கஞ்சி கலையம்
26 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திபோதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
25 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திபூலாங்குறிச்சி அரசு கல்லூரி ரத்ததான முகாம்
22 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை சேர்மன் தேசிய கொடி ஏற்றினார்
22 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் 24 மணி நேர குடிநீர் சப்ளை ஏழு இடங்களில் ஆழ்துளை கிணறுகள்
22 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திபணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட தனியார் டைல்ஸ் நிறுவனம்
21 ஆகஸ்ட், 2026