
கல்வி உதவித் தொகை வழங்கும் முகாம் மற்றும் மருத்துவ முகாம்
எழுத்தாளர் Sivagangai Admin · 29 ஜூன், 2026
2 நிமிட வாசிப்பு
காரைக்குடி, ஜூன் 29-
காரைக்குடி செஞ்சை பகுதியினை சேர்ந்தவர் முனைவர் தினகரன். இவர் ஆடிட்டர் ஆக சிங்கப்பூரில் வசிக்கிறார். இவர் செஞ்சை யில் கட்டியுள்ள தினா வள்ளி மஹால் திருமண மண்டபத்தில் வரும் சொந்த வருமானத்தை அப்படியே பின் தங்கிய மாணவ, மாணவிகளின் கல்வி வளர்ச்சிக்காக வழங்குங்குகிறார். தன் பெற்றோர் ராமசாமி அலமேலு பெயரில் ஒரு அறக்கட்டளை நிறுவி அதன் மூலம் கல்வி உதவி தொகை வழங்கி வருகிறார். அதன்படி காரைக்குடி செஞ்சை தினா வள்ளிமஹாலில் , இரண்டாவது ஆண்டாக கல்வி உதவி தொகை வழங்கும் முகாம் நடந்தது. கனிம வளத்துறை அமைச்சர் டாக்டர் பிரபு 154 மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி தொகையினை வழங்கினார். காரைக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் 27 பள்ளிகளைச் சேர்ந்த 10, 12ஆம் வகுப்பு பொதுதேர்வுகளில் முதல் 3 இடங்களை பிடித்த 134 மாணவர்களுக்கும், பள்ளி,மருத்துவம், பொறியியல், கலைக்கல்லூரிகளில் பயிலும் 20மாணவர்களுக்கும் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது. இன் நிகழ்விற்கு முனைவர் தினகரன் தலைமை தாங்கி முகாமின் நோக்கத்தை எடுத்து கூறினார். தொழிலதிபர் படிக்காசு முன்னிலை வகித்தார்.
சென்னை ஆடிட்டர் சுப்பிரமணியன், குளோபல் மருத்துவமனை சேர்மன் மருத்துவர் குமரேசன், தாசில்தார் ராஜா, தொழிலதிபர் சுப்பிரமணியன், அப்புதாபி செங்கையா ராமசாமி, தங்கமணி, பேராசிரியை ஜெயலட்சுமி, ஆசிரியை கமலா வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் மாணவர்கள், பெற்றோர்களுக்கு நடைபெற்ற மருத்துவ முகாமை அமைச்சர் துவக்கி வைத்தார். நடமாடும் மருத்துவ மனை, குளோபல் மருத்துவமனை, பிரபு டென்டல் கேர் , காணல் கண் மருத்துவ மனை கள் இம் முகாமில் இல்வச சேவைகளை வழங்கினார்கள். இந்திய செஞ்சிலுவை சங்க சேர்மன் சுந்தரராமன் வரவேற்றார். செயலர் ஆனந்தகிருஷ்ணன் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்படுகளை பெரியண்ணன், ஆசிரியர்கள் கிரிஜா, செந்தில்நாதன் மற்றும் செல்வி ஆகியோர் செய்திருந்தனர்.
இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?
மொத்த வாக்குகள்: 0
மேலும் படிக்க

காரைக்குடி அருகே ரூ.500 லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளர், லைன்மேன் கைது

ராஜ ராஜன் கல்லூரியில் சான்றிதழ் வழங்கும் விழா

காரைக்குடியில் கனிம வள துறை அமைச்சர் வீடு, கட்சி அலுவலகம் அருகே போலீசார் குவிப்பு
குவாரி உரிமைத்தை ரத்து செய்ய கோரி புதுக்கோட்டை குளத்தூர் தாலுகா குளவாய்ப்பட்டி கிராமத்தை சேர்ந்த மக்கள் வருவதை அறிந்து நடவடிக்கை
🗞 மற்ற செய்திகள்(16)
மாவட்ட செய்தி
மின்சாரம் தாக்கி தனியார் இ சேவை மைய ஊழியர் பலி
18 ஜூலை, 2026
மாவட்ட செய்தி
காரைக்குடியில் தாசில்தார் வீட்டில் 67 பவுன் திருட்டு
18 ஜூலை, 2026
மாவட்ட செய்திகல்விக்கு செய்யும் முதலீடு ஒரு தலைமுறையையே உயர்த்தும் ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்கிய அமைச்சர் டாக்டர் பிரபு
10 ஜூலை, 2026
மாவட்ட செய்திகாரைக்குடி அதை சுற்றுவட்டாரத்தில் இடி மின்னல் சூறை காற்றுடன் மழை.
10 ஜூலை, 2026
மாவட்ட செய்திபுதுவயல் நடராஜபுரத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டம்
10 ஜூலை, 2026
மாவட்ட செய்திதொழில் வணிகக் கழகம் சார்பில் பாராட்டு விழா
29 ஜூன், 2026
மாவட்ட செய்திகாரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் மதுரை சகோதயா செஸ் போட்டி
29 ஜூன், 2026
மாவட்ட செய்திகாரைக்குடி நகர் பகுதியில் கல்லால் தாக்கி வாலிபர் கொலை
29 ஜூன், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் மாவட்ட ரோல் பால் சாம்பியன்ஷிப் - 2026 போட்டி
27 ஜூன், 2026
மாவட்ட செய்திபோதை ஒழிப்பு தீப்பந்த பேரணி கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் பிரபு தொடங்கி வைத்தார்
26 ஜூன், 2026
மாவட்ட செய்திகாரைக்குடி அருகே நடை பயிற்சிக்கு சென்ற பொழுது கீழே கிடந்த 4 சவரன் தங்க தாலி செயின்
25 ஜூன், 2026
மாவட்ட செய்திகல்லூரி மாணவர்கள் நடத்திய போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
25 ஜூன், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் கண்ணதாசன் பிறந்த நாள் விழா
24 ஜூன், 2026
மாவட்ட செய்தி
காரைக்குடி அருகே கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது
24 ஜூன், 2026
மாவட்ட செய்திதிரிஷா படத்தை மாநகராட்சி கூட்ட அரங்கில் வைக்க கோரி காரைக்குடியில் கவுன்சிலர் அடம்
24 ஜூன், 2026
மாவட்ட செய்திசமுதாயத்தை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள் காரைக்குடியில் அமைச்சர் பிரபு புகழாரம்
20 ஜூன், 2026