முகப்பு
புத., 2 செப்., 2026
வாக்குவாதம், கூச்சல் குழப்பத்துடன் தொடங்கிய காரைக்குடி மாநகராட்சி மன்ற கூட்டம்பதவி இழக்கும் காரைக்குடி மேயர் காரைக்குடியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி; மற்றொருவர் தீவிர சிகிச்சைதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கூட்டம்காரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனையில் இலவச எலும்பு அடர்த்தி சோதனை முகாம்தேவகோட்டையில் குட்கா புகையிலை பறிமுதல்குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் விருது வழங்கினர்இன்ஃபான்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா12.15 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டுக் கொடுத்த அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவுக்கு கோயில் நிர்வாகிகள் நன்றி வாக்குவாதம், கூச்சல் குழப்பத்துடன் தொடங்கிய காரைக்குடி மாநகராட்சி மன்ற கூட்டம்பதவி இழக்கும் காரைக்குடி மேயர் காரைக்குடியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி; மற்றொருவர் தீவிர சிகிச்சைதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கூட்டம்காரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனையில் இலவச எலும்பு அடர்த்தி சோதனை முகாம்தேவகோட்டையில் குட்கா புகையிலை பறிமுதல்குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் விருது வழங்கினர்இன்ஃபான்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா12.15 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டுக் கொடுத்த அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவுக்கு கோயில் நிர்வாகிகள் நன்றி
ரூ 2500  இலவசம்  எங்களுக்கு வேண்டாம்  பிள்ளைகளை காப்பாற்ற  மதுக்கடை மூட வேண்டும்

ரூ 2500 இலவசம் எங்களுக்கு வேண்டாம் பிள்ளைகளை காப்பாற்ற மதுக்கடை மூட வேண்டும்

காரைக்குடி அருகே மித்திராவயல் கிராமத்தில் பெண்கள் முற்றுகை

எழுத்தாளர் Sivagangai Admin · 8 ஜூன், 2026
2 நிமிட வாசிப்பு
காரைக்குடி, ஜூன் 8- காரைக்குடி அருகே மித்திராவயல் கிராமத்தில் அரசு மதுபான கடை (கடை எண் 7653) செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் மது அருந்திவிட்டு கிராமத்து இளைஞர்கள் அதிக அளவில் சாலை விபத்திலும் உடல் பாதிப்பு ஏற்பட்டு பலியாகி உள்ளதால் மாவட்டத்தில் இந்த கிராமத்தில் ஏராளமான இளம் விதவைகள் இருக்கின்றனர். குடிப்பழக்கத்தால் ஆண்பிள்ளைகளுக்கு பெண் தர பிற ஊர்களை சேர்ந்தவர்கள் மறுப்பதால் பலர் திருமணம் ஆகாமல் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மது அருந்திவிட்டு ஏராளமானோர் உடல்நலம் சரியில்லாமல் வீட்டில் நோயாளிகளாகவும், பெற்ற பிள்ளைகளையும், மனைவியையும் பெற்றோர்களை தாக்குதாகவும் இந்த கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த கடையை அகற்றக்கோரி 15 ஆண்டு காலமாக மக்கள் ப
ோராடி வருகின்றனர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு 35 நாட்கள் இந்த மதுகடையை மூடக்கோரி முற்றுகை, தொடர் போராட்டம் நடத்தியும் பலன் இல்லாமல் மீண்டும் அரசு அதே இடத்தில் மதுக்கடையை மீண்டும் திறந்தது. இந்நிலையில் இன்று அந்த பகுதி பெண்கள் மதுக்கடையை முற்றுகையிட்டு அதை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதி பெண்கள் கூறும்போது, அரசு மதுபான கடையை அகற்றினால் போதும். 2500 ரூபாய் பணமும் வேண்டாம் வேறு எந்த இலவசமும் வேண்டாம், என்றனர். சாக்கோட்டை காவல்துறை ஆய்வாளர் மற்றும் வருவாய் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடன்பாடு ஏற்படாததால் கடை அருகிலே தொடர்ந்து போராட்டத்தில் பெண்கள் ஈடுபட்டு வருவதால் மதுக்கடை அடைக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?

மொத்த வாக்குகள்: 0

🗞 மற்ற செய்திகள்(17)

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கூட்டம்மாவட்ட செய்தி

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கூட்டம்

31 ஆகஸ்ட், 2026
காரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனையில் இலவச எலும்பு அடர்த்தி சோதனை முகாம்மாவட்ட செய்தி

காரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனையில் இலவச எலும்பு அடர்த்தி சோதனை முகாம்

31 ஆகஸ்ட், 2026
தேவகோட்டையில் குட்கா புகையிலை பறிமுதல்மாவட்ட செய்தி

தேவகோட்டையில் குட்கா புகையிலை பறிமுதல்

30 ஆகஸ்ட், 2026
குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்மாவட்ட செய்தி

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

29 ஆகஸ்ட், 2026
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் விருது வழங்கினர்மாவட்ட செய்தி

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் விருது வழங்கினர்

29 ஆகஸ்ட், 2026
இன்ஃபான்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழாமாவட்ட செய்தி

இன்ஃபான்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா

29 ஆகஸ்ட், 2026
12.15 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டுக் கொடுத்த  அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவுக்கு கோயில் நிர்வாகிகள் நன்றி மாவட்ட செய்தி

12.15 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டுக் கொடுத்த அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவுக்கு கோயில் நிர்வாகிகள் நன்றி

28 ஆகஸ்ட், 2026
ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் பயிலரங்கம்மாவட்ட செய்தி

ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் பயிலரங்கம்

28 ஆகஸ்ட், 2026
ராஜ ராஜன் பொறியியல் கல்லூரியில்  முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழாமாவட்ட செய்தி

ராஜ ராஜன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா

28 ஆகஸ்ட், 2026
ரூ.5 ஆயிரம் லஞ்சம்  வாங்கிய  வி.ஏ.ஓ, தலையாரியை கைது செய்த லஞ்ச ஒழிப்பு துறைமாவட்ட செய்தி

ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ, தலையாரியை கைது செய்த லஞ்ச ஒழிப்பு துறை

28 ஆகஸ்ட், 2026
குடும்ப பிரச்சனையில் ஆட்டோ, கார்  பொருட்களை அடித்து நொறுக்கிய உறவினர்கள்மாவட்ட செய்தி

குடும்ப பிரச்சனையில் ஆட்டோ, கார் பொருட்களை அடித்து நொறுக்கிய உறவினர்கள்

28 ஆகஸ்ட், 2026
தேவகோட்டை மேல்மருவத்தூர் சக்தி பீடம் கஞ்சி கலையம்மாவட்ட செய்தி

தேவகோட்டை மேல்மருவத்தூர் சக்தி பீடம் கஞ்சி கலையம்

26 ஆகஸ்ட், 2026
போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டிமாவட்ட செய்தி

போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

25 ஆகஸ்ட், 2026
பூலாங்குறிச்சி அரசு கல்லூரி ரத்ததான முகாம்மாவட்ட செய்தி

பூலாங்குறிச்சி அரசு கல்லூரி ரத்ததான முகாம்

22 ஆகஸ்ட், 2026
தேவகோட்டை சேர்மன் தேசிய கொடி ஏற்றினார்மாவட்ட செய்தி

தேவகோட்டை சேர்மன் தேசிய கொடி ஏற்றினார்

22 ஆகஸ்ட், 2026
காரைக்குடியில் 24 மணி நேர குடிநீர் சப்ளை ஏழு இடங்களில் ஆழ்துளை கிணறுகள் மாவட்ட செய்தி

காரைக்குடியில் 24 மணி நேர குடிநீர் சப்ளை ஏழு இடங்களில் ஆழ்துளை கிணறுகள்

22 ஆகஸ்ட், 2026
பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட  தனியார் டைல்ஸ் நிறுவனம்மாவட்ட செய்தி

பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட தனியார் டைல்ஸ் நிறுவனம்

21 ஆகஸ்ட், 2026