
மாவட்ட செய்தி🔴 உடனுக்குடன்
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் விருது வழங்கினர்
எழுத்தாளர் KANNAN · 29 ஆகஸ்ட், 2026
1 நிமிட வாசிப்பு
தேவகோட்டையில் த க இ பெ-சார்பில் 2025 விருதுகள் வழங்கும் விழா சென்னை முதன்மை கணக்கு தணிக்கையாளர் திருப்பதி வெங்கடசாமி IAAS பங்கேற்பு
தேவகோட்டை (ஆக்-29)
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஆனந்தா கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் இணைந்து நடத்திய 2025-ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான கலை, இலக்கிய மற்றும் ஊடக விருதுகள் வழங்கும் விழா
தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் கலைத்துறையில் தங்களின் தனித்துவமான படைப்புகளின் மூலம் பங்களிப்பு செய்த சிறந்த படைப்பாளர்களைக் கௌரவிக்கும் வகையில்
சிறந்த ஆய்வு நூல்,
சிறந்த கட்டுரை நூல்,சிறந்த கவிதை நூல்,
சிறந்த சிறுகதை நூல்,சிறந்த சிறுவர் நூல்
சிறந்த மொழிபெயர்ப்பு நூல்,சிறந்த அறிவியல் நூல்,
சிறந்த ஆவணப்படம் (Documentary),
சிறந்த குறும்படம் (Short Film),சிறந்த நாடகம் ஆகியவற்றிற்கு விருதுகள் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை முதன்மை கணக்கு தணிக்கையாளர் திருப்பதி வெங்கடசாமி IAAS கலந்து கொண்டு விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்.
அப்போது பேசிய அவர், "சமூகத்தின் அறிவொளி இயக்கத்திற்கு இலக்கியமும் கலைகளும் மிக முக்கியச் சான்றாகத் திகழ்கின்றன. படைப்பாளிகளின் சமூகப் பொறுப்புணர்வுமிக்க படைப்புகளை அடையாளம் கண்டு ஊக்குவிப்பது எதிர்காலத் தலைமுறைக்கு மிகச்சிறந்த வழிகாட்டுதலாக அமையும்" எனக் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் அறம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் முனைவர் முருகன் இந்நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து வழிநடத்தினார்.
இவ்விழாவில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள்,சமூக ஆர்வலர்கள், பதிப்பகப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்
இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?
மொத்த வாக்குகள்: 0
மேலும் படிக்க

வாக்குவாதம், கூச்சல் குழப்பத்துடன் தொடங்கிய காரைக்குடி மாநகராட்சி மன்ற கூட்டம்
திமுக உறுப்பினர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாததால் பரபரப்பு

பதவி இழக்கும் காரைக்குடி மேயர்
தொடர்ந்து 3 முறைமாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்காததால் தீர்மானம்

காரைக்குடியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி; மற்றொருவர் தீவிர சிகிச்சை
🗞 மற்ற செய்திகள்(16)
மாவட்ட செய்திதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கூட்டம்
31 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகாரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனையில் இலவச எலும்பு அடர்த்தி சோதனை முகாம்
31 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதேவகோட்டையில் குட்கா புகையிலை பறிமுதல்
30 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகுழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
29 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திஇன்ஃபான்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா
29 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்தி12.15 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டுக் கொடுத்த அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவுக்கு கோயில் நிர்வாகிகள் நன்றி
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் பயிலரங்கம்
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திராஜ ராஜன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ, தலையாரியை கைது செய்த லஞ்ச ஒழிப்பு துறை
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகுடும்ப பிரச்சனையில் ஆட்டோ, கார் பொருட்களை அடித்து நொறுக்கிய உறவினர்கள்
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை மேல்மருவத்தூர் சக்தி பீடம் கஞ்சி கலையம்
26 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திபோதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
25 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திபூலாங்குறிச்சி அரசு கல்லூரி ரத்ததான முகாம்
22 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை சேர்மன் தேசிய கொடி ஏற்றினார்
22 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் 24 மணி நேர குடிநீர் சப்ளை ஏழு இடங்களில் ஆழ்துளை கிணறுகள்
22 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திபணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட தனியார் டைல்ஸ் நிறுவனம்
21 ஆகஸ்ட், 2026