
நூறாண்டுகளை கடந்து செட்டிநாட்டு கலைநயத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கும் "சிதம்பர விலாஸ்"
கோட்டையூரில் அறிவியல் தொழில்நுட்பம் குறைந்த காலத்தில் பிரமிக்க வைக்கும் தொழில்நுட்பத்துடன் வீட்டைக் கட்டிய முன்னோர்கள், கட்டிட கலை தொழிலாளர்களை நினைவு கூர்ந்து நன்றி தெரிவிக்கும் விதமாக நூற்றாண்டு விழா
எழுத்தாளர் Sivagangai Admin · 29 மே, 2026
1 நிமிட வாசிப்பு
காரைக்குடி, மே 29
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோட்டையூர் பி. எம்.ஏ வீதியில் அமைந்துள்ளது "சிதம்பர விலாஸ்" வீடு. நூறு ஆண்டுகளைக் கடந்தும் செட்டிநாட்டு கட்டிடக்கலையை பறைசாற்றும் விதமாக இன்றும் கம்பீரமாக காட்சியளித்து வருகிறது. 1924 இல் அண்ணாமலை என்பவரால் ரூ 33,000 மதிப்பீட்டில் 3 தளங்களுடன் ஒரு ஏக்கரில் இந்த வீடு கட்டப்பட்டது . தற்போது ஐந்து தலைமுறையாக இந்த வீட்டை பழமை மாறாமல் பராமரித்து வருகின்றனர். செட்டிநாடு பாரம்பரிய முறையில் ஒரு ஏக்கரில் கட்டப்பட்டுள்ள இந்த வீட்டின் முகப்பு 9 வளைவுகளுடன் பெல்ஜியம் கிரானைட் தூண்களுடன் அமைந்துள்ளது. 25 அடி உயரம் கொண்ட வரவேற்பு கால், மேக்கப் அறை உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட அறைகள், 5 கிணறு , மூன்று சமையலறை மற்றும் டைனிங் ஹால்களுடன் பிரம்மாண்ட முற்றம், வெப்பம் தாக்காத வேலைப்பாடுகளுடன் கூடிய மேற்கூரை, வழுவழுப்பான ஒன்றை அடி அகல சுவர் பார்ப்போரை வியக்க வைக்கிறது. இன்றும் முழுமையான பராமரிப்புடன் பாரம்பரிய பொலிவு மாறாமல் கம்பீரமாக காட்சியளிக்கிறது
அறிவியல் தொழில்நுட்பம் குறைந்த காலத்தில் பிரமிக்க வைக்கும் தொழில்நுட்பத்துடன் கூடிய வீட்டைக் கட்டிய முன்னோர்களுக்கும் கட்டிட கலை தொழிலாளர்களுக்கும் நினைவு கூர்ந்து நன்றி தெரிவிக்கும் விதமாக சிதம்பர விலாஸ் வீட்டின் நூற்றாண்டு விழாவை பூர்வாங்க சேவை, பஜனை, கலாச்சார நிகழ்ச்சி, பட்டிமன்றம், ஸ்ரீ ராதா கோவிந்தா திருக்கல்யாண நிகழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர் .
இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?
மொத்த வாக்குகள்: 0
மேலும் படிக்க

வாக்குவாதம், கூச்சல் குழப்பத்துடன் தொடங்கிய காரைக்குடி மாநகராட்சி மன்ற கூட்டம்
திமுக உறுப்பினர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாததால் பரபரப்பு

பதவி இழக்கும் காரைக்குடி மேயர்
தொடர்ந்து 3 முறைமாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்காததால் தீர்மானம்

காரைக்குடியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி; மற்றொருவர் தீவிர சிகிச்சை
🗞 மற்ற செய்திகள்(17)
மாவட்ட செய்திதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கூட்டம்
31 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகாரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனையில் இலவச எலும்பு அடர்த்தி சோதனை முகாம்
31 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதேவகோட்டையில் குட்கா புகையிலை பறிமுதல்
30 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகுழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
29 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் விருது வழங்கினர்
29 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திஇன்ஃபான்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா
29 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்தி12.15 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டுக் கொடுத்த அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவுக்கு கோயில் நிர்வாகிகள் நன்றி
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் பயிலரங்கம்
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திராஜ ராஜன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ, தலையாரியை கைது செய்த லஞ்ச ஒழிப்பு துறை
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகுடும்ப பிரச்சனையில் ஆட்டோ, கார் பொருட்களை அடித்து நொறுக்கிய உறவினர்கள்
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை மேல்மருவத்தூர் சக்தி பீடம் கஞ்சி கலையம்
26 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திபோதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
25 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திபூலாங்குறிச்சி அரசு கல்லூரி ரத்ததான முகாம்
22 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை சேர்மன் தேசிய கொடி ஏற்றினார்
22 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் 24 மணி நேர குடிநீர் சப்ளை ஏழு இடங்களில் ஆழ்துளை கிணறுகள்
22 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திபணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட தனியார் டைல்ஸ் நிறுவனம்
21 ஆகஸ்ட், 2026