
மாவட்ட செய்தி🔴 உடனுக்குடன்
பள்ளத்தூர் வாரச்சந்தையை வியாபாரிகளுக்கு உடனே வழங்கக் கோரி பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு
* மெத்தனமாக செயல்படும் பேரூராட்சி நிர்வாகம்
எழுத்தாளர் Sivagangai Admin · 13 அக்டோபர், 2026
2 நிமிட வாசிப்பு
காரைக்குடி, செப்.13-
காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் பேரூராட்சியில், புதிதாகக் கட்டப்பட்ட வாரச்சந்தைக் கடைகளை நீண்டகாலமாக வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளுக்கே வழங்க வலியுறுத்தி, திமுக மற்றும் அதிமுகவைச் சேர்ந்த பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளத்தூர் பேரூராட்சியில் சுமார் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக வாரச்சந்தைக் கடைகள் கட்டப்பட்டு கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு திறக்கப்பட்டது. நீண்டகாலமாக அந்த இடத்தில் கடை நடத்தி வரும் வியாபாரிகளுக்கு, தலா 10 ஆயிரம் ரூபாய் வைப்புத் தொகை பெற்றுக்கொண்டு மீண்டும் கடைகள் ஒதுக்கீடு செய்யப் பேரூராட்சி நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றியது.
ஆனால், சிவகங்கை மாவட்ட உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) அந்தத் தீர்மானத்தை ரத்து செய்துவிட்டு, கடைகளைப் பொது ஏலத்தில் விட அறிவுறுத்தியதாகத் தெரிகிறது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பேரூராட்சி கவுன்சிலர்கள், நீண்டகாலமாக வாரச்சந்தையில் கடை நடத்தி வரும் வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளித்து கடைகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மகமைக்கான பொது ஏலத்திற்கு தாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், ஏற்கெனவே கடை நடத்தி வரும் சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். ஆனால் பேரூராட்சி நிர்வாகமோ மகமை வசூல் செய்ய ஆன்லைனில் ஏலம் விடுவதாக கூறியுள்ளது. ஆன்லைனில் ஏலம் விட்டால் வெளி நபர்கள் அதை ஏலம் எடுக்கும்போது, அதிக தொகை செலுத்த வற்புறுத்துவார்கள். அவ்வாறு நடந்தால், ஏலத்தில் கடைகளைப் பெறுபவர்கள் நிர்ணயிக்கும் விலைக்கு ஏற்ப காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்றும் கவலை தெரிவித்தனர். ஆனால் பள்ளத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் இதை கவனத்தில் எடுக்காமல், பேரூராட்சிக்கு வருவதையே தவிர்த்து வருகிறார்.
இது குறித்து பேரூராட்சி கவுன்சிலர் சோலைமலை கூறுகையில், ஏற்கெனவே கடை நடத்தி வரும் வியாபாரிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும், வரும் மார்ச் மாதம் வரை பேரூராட்சி நிர்வாகமே கடை வாடகையை வசூலிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். வியாபாரிகளின் வாழ்வதாரத்தை கருத்தில் கொள்ளாமல், வருமானத்தை மட்டுமே நிர்வாகம் கவனத்தில் கொள்கிறது. எனவே உள்ளூர் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், வாரச்சந்தைக் கடைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலரை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, அவர் வழக்கம்போல் போனை எடுக்கவில்லை.
இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?
மொத்த வாக்குகள்: 0
மேலும் படிக்க
🗞 மற்ற செய்திகள்(16)
மாவட்ட செய்திதேவகோட்டையில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
13 அக்டோபர், 2026
மாவட்ட செய்திஆழ்கடலில் 5 சதவீதம் மட்டுமே ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் நீலப்பொருளாதார ஆராய்ச்சியில் கூடுதல் கவனம் தேவை *கோவா தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சுனில்குமார் வேண்டுகோள்
7 அக்டோபர், 2026
மாவட்ட செய்திடாக்டர் உமையாள் ராமநாதன் 98-வது பிறந்தநாள் விழா
6 அக்டோபர், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் பிரபல துணிக்கடை முன்பு ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு
5 அக்டோபர், 2026
மாவட்ட செய்திதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் டோக்கன் கிடைத்தும் ஆதார் சிக்கலால் தங்க மோதிரம் கிடையாது என திருப்பி அனுப்பிய மருத்துவமனை நிர்வாகம் பச்சிளம் குழந்தையுடன் மகிழ்ச்சியாக காத்திருந்த பெண் ஏமாற்றம்.
3 அக்டோபர், 2026
மாவட்ட செய்திபொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாளுடன் சுற்றித்திரிந்த நபர் கைது
2 அக்டோபர், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் சமரச தீர்வு மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு
1 அக்டோபர், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் உணவுப்படி வழங்க வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தபோராட்டம்
1 அக்டோபர், 2026
மாவட்ட செய்திபள்ளத்தூர் அருகே ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் – டிரைவர் தப்பியோட்டம்
28 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திதலைமை தேர்தல் ஆணையர் பதவி நீக்க வலியுறுத்தி காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
28 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் ஆபியார் தின விழா
28 செப்டம்பர், 2026
மாவட்ட செய்தி"வாக்காளர் நீக்கத் தந்திரம், மின்சார துறையில் தனியார்மயம், போலி அரசியல் அணுகுமுறை": மத்திய - மாநில அரசுகள் மீது CPM மாநிலச் செயலாளர் சண்முகம் கடும் தாக்கு!
26 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திசிக்ரியில் பார்வையாளர் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்டுபிடிப்புகளை பார்வையிட்ட மாணவர்கள்
26 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திதேவகோட்டையில் டிஎஸ்பி தலைமையில் ரோந்து பணி
25 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை அருகே மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு போலீசார் விசாரணை
25 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திகாலை உணவு திட்டம் விரிவாக்கம்
22 செப்டம்பர், 2026


