
மாவட்ட செய்தி🔴 உடனுக்குடன்
"வாக்காளர் நீக்கத் தந்திரம், மின்சார துறையில் தனியார்மயம், போலி அரசியல் அணுகுமுறை": மத்திய - மாநில அரசுகள் மீது CPM மாநிலச் செயலாளர் சண்முகம் கடும் தாக்கு!
எழுத்தாளர் Sivagangai Admin · 26 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு
காரைக்குடி, செப். 26-
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் சண்முகம் கலந்து கொண்டு புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது,
"தேர்தலில் மக்களிடம் நேரடியாக வாக்குகள் பெற முடியாத சூழலில், எதிர்த்தரப்பு வாக்காளர்களைப் பட்டியலிலிருந்தே நீக்கி ஆட்சியைப் பிடிக்கும் புதிய தந்திரத்தை மத்திய பாஜக அரசு கையாண்டுள்ளது. 'SIR' (Special Intensive Revision) என்ற பெயரில் நியாயமான வாக்காளர்களின் பெயர்களைப் பட்டியலிலிருந்து நீக்கும் பணி உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
இப்போக்கை அனுமதித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும். நீக்கப்பட்ட அனைத்து வாக்காளர்களையும் மீண்டும் பட்டியலில் சேர்க்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் அக்டோபர் 1-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மூன்று இடதுசாரிக் கட்சிகள் (சிபிஐ, சிபிஎம், சிபிஐ-எம்.எல்) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்."
"தமிழ்நாடு முழுவதும் மின் கணக்கீட்டுப் பணியைத் தனியார் வசம் ஒப்படைப்பது மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பது குறித்த அறிவிப்பு வன்மையான கண்டனத்திற்குரியது. பொதுத்துறைப் பணிகளின் தன்மையையும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, அரசு இந்த முடிவை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
மின்சாரம் என்பது மக்களின் அத்தியாவசியத் தேவை. எனவே, ஆங்காங்கே ஏற்படும் மின்வெட்டுப் பிரச்சனையில் தமிழ்நாடு அரசு கூடுதல் கவனம் செலுத்தி முழுமையான தீர்வு காண முன்வர வேண்டும். மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய அல்லது தமிழ்நாட்டின் நலனைப் பாதிக்கக்கூடிய எந்தவொரு விஷயமாக இருந்தாலும், வெளியிலிருந்து ஆதரவு அளித்தாலும் கூட எங்களது எதிர்ப்பைத் தொடர்ந்து தெரிவிப்போம்."
"ஜெம் வீரமணி கைது விவகாரத்தில் திமுக, அதிமுக அல்லது த.வெ.க ஆகிய எந்தவொரு அரசியல் கட்சியும் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்கவில்லை. நீதிமன்றம் பிறப்பித்த மேல் விசாரணை (Further Investigation) உத்தரவின் அடிப்படையிலேயே தற்போது இக்கைது நடவடிக்கை சாத்தியமாகியுள்ளது.
தினம் ஒரு தகவலும் ஆதாரமும் வெளியாகி வருவதால், சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டு விசாரணை நடப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இந்தச் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையைச் சென்னை காவல் ஆணையர் மேற்பார்வையிடுவதற்குப் பதிலாக, சென்னை உயர்நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் நடத்த வேண்டும்."
"அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, வெறும் 20 நாட்களில் பதவியை ராஜினாமா செய்த அதே நபரை மீண்டும் த.வெ.க வேட்பாளராக நிறுத்தியுள்ளது முற்றிலும் நெறிமுறையற்ற செயல். வாக்களித்த மக்களை அவமானப்படுத்தும் வகையில் நடந்துகொண்ட அந்த நபர், எதற்காக ராஜினாமா செய்தார், மீண்டும் ஏன் எம்.எல்.ஏ ஆக விரும்புகிறார் என்பதற்குப் பதிலளிக்க வேண்டும். அத்தகைய வேட்பாளரை ஆதரிக்கும் கேள்விக்கே இடமில்லை.
எம்ஜிஆர் எந்தக் கட்சிக்கு எதிராகக் கட்சியைத் தொடங்கினாரோ, அதே கட்சியுடன் இணைந்துவிட்டதால் வெளியே வந்தோம் என்று கூறுவது அப்பட்டமான பொய். உண்மையிலேயே கொள்கை உறுதியுடன் இருந்திருந்தால், அவர்கள் கட்சியிலிருந்து விலகி சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்களாகத் தொடர்ந்திருக்க முடியும். அரசியல் ஆதாயத்திற்காகவே வெளியேறிய இவர்கள், அதை மறைக்கத் தற்போது காரணங்களைச் சொல்லி வருகின்றனர்.
த.வெ.க கட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிப்பது குறித்த எங்களது அரசியல் நிலப்பாடு தெளிவானது. திமுக, அதிமுக, த.வெ.க தலைமையிலான எந்தவொரு கூட்டணியின் அங்கமாகவும் இருக்க இடதுசாரி கட்சிகள் விரும்பவில்லை. அதேவேளையில் தேர்தலைப் புறக்கணிப்பது சரியாக இருக்காது என்பதால், இடதுசாரி கட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றன. விவசாயிகள் மற்றும் உழைப்பாளி மக்கள் நிறைந்த பகுதிகளில் போட்டியிடுவதால், மக்கள் ஆதரவோடு தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்ற முழு நம்பிக்கை உள்ளது."
இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?
மொத்த வாக்குகள்: 0
மேலும் படிக்க
🗞 மற்ற செய்திகள்(16)
மாவட்ட செய்திதேவகோட்டையில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
13 அக்டோபர், 2026
மாவட்ட செய்திபள்ளத்தூர் வாரச்சந்தையை வியாபாரிகளுக்கு உடனே வழங்கக் கோரி பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு
13 அக்டோபர், 2026
மாவட்ட செய்திஆழ்கடலில் 5 சதவீதம் மட்டுமே ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் நீலப்பொருளாதார ஆராய்ச்சியில் கூடுதல் கவனம் தேவை *கோவா தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சுனில்குமார் வேண்டுகோள்
7 அக்டோபர், 2026
மாவட்ட செய்திடாக்டர் உமையாள் ராமநாதன் 98-வது பிறந்தநாள் விழா
6 அக்டோபர், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் பிரபல துணிக்கடை முன்பு ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு
5 அக்டோபர், 2026
மாவட்ட செய்திதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் டோக்கன் கிடைத்தும் ஆதார் சிக்கலால் தங்க மோதிரம் கிடையாது என திருப்பி அனுப்பிய மருத்துவமனை நிர்வாகம் பச்சிளம் குழந்தையுடன் மகிழ்ச்சியாக காத்திருந்த பெண் ஏமாற்றம்.
3 அக்டோபர், 2026
மாவட்ட செய்திபொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாளுடன் சுற்றித்திரிந்த நபர் கைது
2 அக்டோபர், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் சமரச தீர்வு மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு
1 அக்டோபர், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் உணவுப்படி வழங்க வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தபோராட்டம்
1 அக்டோபர், 2026
மாவட்ட செய்திபள்ளத்தூர் அருகே ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் – டிரைவர் தப்பியோட்டம்
28 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திதலைமை தேர்தல் ஆணையர் பதவி நீக்க வலியுறுத்தி காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
28 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் ஆபியார் தின விழா
28 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திசிக்ரியில் பார்வையாளர் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்டுபிடிப்புகளை பார்வையிட்ட மாணவர்கள்
26 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திதேவகோட்டையில் டிஎஸ்பி தலைமையில் ரோந்து பணி
25 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை அருகே மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு போலீசார் விசாரணை
25 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திகாலை உணவு திட்டம் விரிவாக்கம்
22 செப்டம்பர், 2026


