முகப்பு
திங்., 19 அக்., 2026
• காரைக்குடியில் சமுதாய வளைகாப்பு விழா 2026 - அமைச்சர் T.K. பிரபு பங்கேற்பு• தங்க மோதிரம் வழங்கிய அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு• தேவகோட்டையில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்• பள்ளத்தூர் வாரச்சந்தையை வியாபாரிகளுக்கு உடனே வழங்கக் கோரி பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு• ஆழ்கடலில் 5 சதவீதம் மட்டுமே ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் நீலப்பொருளாதார ஆராய்ச்சியில் கூடுதல் கவனம் தேவை *கோவா தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சுனில்குமார் வேண்டுகோள்• டாக்டர் உமையாள் ராமநாதன் 98-வது பிறந்தநாள் விழா• காரைக்குடியில் பிரபல துணிக்கடை முன்பு ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு • தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் டோக்கன் கிடைத்தும் ஆதார் சிக்கலால் தங்க மோதிரம் கிடையாது என திருப்பி அனுப்பிய மருத்துவமனை நிர்வாகம் பச்சிளம் குழந்தையுடன் மகிழ்ச்சியாக காத்திருந்த பெண் ஏமாற்றம்.• பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாளுடன் சுற்றித்திரிந்த நபர் கைது• பள்ளத்தூர் அருகே ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் – டிரைவர் தப்பியோட்டம்• காரைக்குடியில் சமுதாய வளைகாப்பு விழா 2026 - அமைச்சர் T.K. பிரபு பங்கேற்பு• தங்க மோதிரம் வழங்கிய அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு• தேவகோட்டையில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்• பள்ளத்தூர் வாரச்சந்தையை வியாபாரிகளுக்கு உடனே வழங்கக் கோரி பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு• ஆழ்கடலில் 5 சதவீதம் மட்டுமே ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் நீலப்பொருளாதார ஆராய்ச்சியில் கூடுதல் கவனம் தேவை *கோவா தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சுனில்குமார் வேண்டுகோள்• டாக்டர் உமையாள் ராமநாதன் 98-வது பிறந்தநாள் விழா• காரைக்குடியில் பிரபல துணிக்கடை முன்பு ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு • தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் டோக்கன் கிடைத்தும் ஆதார் சிக்கலால் தங்க மோதிரம் கிடையாது என திருப்பி அனுப்பிய மருத்துவமனை நிர்வாகம் பச்சிளம் குழந்தையுடன் மகிழ்ச்சியாக காத்திருந்த பெண் ஏமாற்றம்.• பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாளுடன் சுற்றித்திரிந்த நபர் கைது• பள்ளத்தூர் அருகே ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் – டிரைவர் தப்பியோட்டம்

காரைக்குடியில் தமிழாசிரியர் கழகத் தேர்தலில் விதிமீறல் புகார்: தேர்தல் அலுவலருடன் ஆசிரியர்கள் வாக்குவாதத்தால் பரபரப்பு

​சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற தமிழகத் தமிழாசிரியர் கழக மாநிலத் தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, தேர்தலை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி உரிமை மீட்புக் குழுவினர் தேர்தல் அலுவலர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காரைக்குடியில் தமிழக தமிழாசிரியர் கழக மாநில தேர்தல் நடைபெற்றது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி 12 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் கூறுகையில், இன்று நடந்த தேர்தலில் தமிழகத்தின் 38 மாவட்டங்களில் பெரம்பலூர் மாவட்டம் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. 25-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் முறையான தேர்தல் நடத்தப்படவில்லை. தலைமையால் நேரடியாக நியமிக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களை மட்டுமே வைத்து வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. மாநில வரவு-செலவு கணக்குகளைப் பொதுக்குழுவில் சமர்ப்பிக்கவில்லை. குற்றாலத்தில் நடைபெற்ற மாவட்ட விழாவைப் பொதுக்குழுவாகப் போலியாக சித்தரித்து எந்தவிதத் தீர்மானமும் நிறைவேற்றாமல் தலைமை தன்னிச்சையாகத் தேர்தல் தேதியை அறிவித்துள்ளது. பல மாவட்ட உறுப்பினர்களின் பெயர்கள் திட்டமிட்டு விடுபட்டுள்ளன. மேலும், வாக்காளர் பட்டியல் அனைத்து உறுப்பினர்களுக்கும் வெளிப்படையாக வழங்கப்படாமல் சிலருக்கு மட்டுமே தரப்பட்டுள்ளது. பதவி உயர்வு பெற்று 12 ஆண்டுகளாகப் பொறுப்பில் தொடரும் தலைமையாசிரியர்களே மீண்டும் அதிகாரத்திற்கு வரும் வகையில் தேர்தல் ஒருதலைப்பட்சமாக நடத்தப்படுகிறது, என்றனர். இந்நிலையில், ​இத்தேர்தலை உடனடியாக நிறுத்தி வைக்கக்கோரி 12 மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் ஆசிரியர்கள் தேர்தல் ஆணையாளரிடம் மனு அளிக்க முயன்றனர். ஆனால், அம்மனுவைப் பெற அவர் மறுத்ததால் தேர்தல் களத்தில் கடும் மோதல் சூழல் நிலவியது. இறுதியாக எந்தவித முடிவும் எட்டப்படாத நிலையில், ஆசிரியர்கள் கலைந்து சென்றனர்.