முகப்பு
திங்., 19 அக்., 2026
• காரைக்குடியில் சமுதாய வளைகாப்பு விழா 2026 - அமைச்சர் T.K. பிரபு பங்கேற்பு• தங்க மோதிரம் வழங்கிய அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு• தேவகோட்டையில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்• பள்ளத்தூர் வாரச்சந்தையை வியாபாரிகளுக்கு உடனே வழங்கக் கோரி பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு• ஆழ்கடலில் 5 சதவீதம் மட்டுமே ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் நீலப்பொருளாதார ஆராய்ச்சியில் கூடுதல் கவனம் தேவை *கோவா தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சுனில்குமார் வேண்டுகோள்• டாக்டர் உமையாள் ராமநாதன் 98-வது பிறந்தநாள் விழா• காரைக்குடியில் பிரபல துணிக்கடை முன்பு ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு • தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் டோக்கன் கிடைத்தும் ஆதார் சிக்கலால் தங்க மோதிரம் கிடையாது என திருப்பி அனுப்பிய மருத்துவமனை நிர்வாகம் பச்சிளம் குழந்தையுடன் மகிழ்ச்சியாக காத்திருந்த பெண் ஏமாற்றம்.• பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாளுடன் சுற்றித்திரிந்த நபர் கைது• பள்ளத்தூர் அருகே ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் – டிரைவர் தப்பியோட்டம்• காரைக்குடியில் சமுதாய வளைகாப்பு விழா 2026 - அமைச்சர் T.K. பிரபு பங்கேற்பு• தங்க மோதிரம் வழங்கிய அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு• தேவகோட்டையில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்• பள்ளத்தூர் வாரச்சந்தையை வியாபாரிகளுக்கு உடனே வழங்கக் கோரி பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு• ஆழ்கடலில் 5 சதவீதம் மட்டுமே ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் நீலப்பொருளாதார ஆராய்ச்சியில் கூடுதல் கவனம் தேவை *கோவா தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சுனில்குமார் வேண்டுகோள்• டாக்டர் உமையாள் ராமநாதன் 98-வது பிறந்தநாள் விழா• காரைக்குடியில் பிரபல துணிக்கடை முன்பு ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு • தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் டோக்கன் கிடைத்தும் ஆதார் சிக்கலால் தங்க மோதிரம் கிடையாது என திருப்பி அனுப்பிய மருத்துவமனை நிர்வாகம் பச்சிளம் குழந்தையுடன் மகிழ்ச்சியாக காத்திருந்த பெண் ஏமாற்றம்.• பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாளுடன் சுற்றித்திரிந்த நபர் கைது• பள்ளத்தூர் அருகே ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் – டிரைவர் தப்பியோட்டம்

சிக்ரியில் பார்வையாளர் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்டுபிடிப்புகளை பார்வையிட்ட மாணவர்கள்

காரைக்குடி சிக்ரியில் நடந்த பார்வையாளர் தினத்தின் முதல்நாளை முன்னிட்டு 8280 பேர் அறிவியல் கண்டுபிடிப்புகளை பார்வையிட்டனர். மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் 38 ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றாக காரைக்குடி சிக்ரி நிறுவனம் செயல்படுகிறது. தொழில்துறை மற்றும் சமூக தேவைகளை நிவர்த்தி செய்யும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கண்டுபிடிப்புகளில் காரைக்குடி சிக்ரி தனித்தன்மையை பெற்று விளங்குகிறது. ஆண்டுதோறும், சி.எஸ்.ஐ.ஆர் நிறுவன நாளை நினைவு கூறும் விதமாக செப்.26 பார்வையாளர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. நடப்பாண்டு செப்.26 மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்கள் பார்வையாளர் தினம் நடைபெறுகிறது. முதல்நாளான நேற்று நடந்த பார்வையாளர் தினத்தை சிக்ரி இயக்குனர் ரமேஷா தலைமையேற்று தொடங்கி வைத்தார். பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளிக் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பார்வையிட்டனர். அதிக நேரம் சார்ஜ் நிற்கும் ஜிங்க் அலுமினியம் ஏர் பேட்டரீஸ், பசுமை எரிசக்தி ஹைட்ரஜன் உற்பத்தி, உப்பு நீரில் மின்சாரம், 3டி பிரிண்டிங், மண் பரிசோதனை கருவிகள், நவீன கனிம மூலப்பொருட்கள், நோய்க் கிருமிகளை கண்டறியும் நவீன பயோ சென்சார்கள், முகக்கவசம் மூலம் நுரையீரல் தன்மையை பரிசோதிக்கும் மைக்ரோ சிப் தொழில்நுட்பம், மழைநீர் சேமிக்கும் தரைதள கான்கிரீட், உலோக அரிமான தடுப்பு, தொழிற்சாலைக்கு உபயோகமான ரசாயனங்கள், தூய நிலையான ஆற்றல், மின்முலாம் பூசுதல் மற்றும் நானோ மின் வேதியியல், உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கண்டுபிடிக்கப்பட்ட ஆராய்ச்சிகளின் மாதிரிகள் வைக்கப்பட்டிருந்தது. மாணவ மாணவிகள் பொதுமக்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளை ஆர்வமுடன் பார்வையிட்டனர். அடுத்த தலைமுறை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை எதிர்கால விஞ்ஞானிகளாகவும் தொழில்நுட்ப வல்லுநர்களாகவும் உருவாகவும், 'விக்சித் பாரத்@2047 எனும் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கவும் இந்த கண்டுபிடிப்புகள் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது.