குடும்ப பிரச்சனையில் ஆட்டோ, கார் பொருட்களை அடித்து நொறுக்கிய உறவினர்கள்
காரைக்குடி, ஆக.28- காரைக்குடி ரயில்வே ரோடு பகுதியைச் சேர்ந்தவர்கள் பாபு – தேவகி தம்பதியினர். இவர்களது மகன் விஜயகுமாருக்கும், ராமநாதபுரத்தைச் சேர்ந்த சக்தியின் மகள் சந்தியாவுக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில், இருவரும் காரைக்குடியில் வசித்து வந்துள்ளனர். கணவன்–மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில் விஜயகுமார், தனது மனைவி சந்தியாவை தாக்கியதாக கூறப்படுகிறது. சந்தியா, தனது தாய் வீட்டிற்குச் சென்று நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சந்தியாவின் தந்தை சக்தி மற்றும் அவரது சகோதரர் கௌதமன் ஆகிய இருவரும் காரைக்குடிக்கு வந்து, விஜயகுமார் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மற்றும் காரை அடித்து சேதப்படுத்தியதுடன், வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கினர். விஜயகுமாரின் தாய் தேவகி அளித்த புகாரின் பேரில், காரைக்குடி வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.