"நானும் பஸ்ஸை மறிப்பேன்" – வாங்க போகலாம்
காரைக்குடியில் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து போராட்டம் நடந்த நிலையில், போராட்டம் முடிவுக்கு வந்த பின் ஒற்றை ஆளாக ஒரு இரண்டு பஸ்சையாவது மறிக்க விடுங்கள் என ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க., பெண் கவுன்சிலரால் பரபரப்பு ஏற்பட்டது. எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து காரைக்குடியில் தி.மு.க.,வினர் போராட்டம் நடத்தினர். இதில் மாநகர செயலாளர் மற்றும் தி.மு.க.,வினர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு லேட்டாக வந்த திமுக மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் தெய்வானை இளமாறன் "நானும் என் பங்கிற்கு இரண்டு பேருந்துகளை மறிப்பேன்" என்று கூறி ஒற்றை ஆளாக சாலை மறியல் செய்ய முயன்றார். இதையடுத்து காவல்துறையினர் அவரிடம் எல்லோரையும் கைது செய்தாகி விட்டது. எனவே நீங்களும் வாருங்கள் என கூறி கைது செய்து காவல் வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.