காரைக்குடியில் சமரச தீர்வு மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி * நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு
காரைக்குடி, அக்.2- காரைக்குடி நீதிமன்ற வளாகத்தில் சமரச தீர்வு மையம் மற்றும் துணை சமரச தீர்வு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் மூலம் தனிநபர் வழக்குகள், பண வசூல் வழக்குகள், குடும்ப வழக்குகள், சொத்து வழக்குகள், வாடகை வழக்குகள், காசோலை வழக்குகள், மின்சார வாரிய வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு உரிமையியல் மற்றும் இதர வழக்குகளுக்கு சமரச முறையில் தீர்வு காணப்பட்டு வருகிறது. சமரச முறையின் மூலம் வழக்குகளை விரைவாகவும், சுமூகமாகவும் தீர்த்துக்கொள்ள முடியும் என்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், “சமரசம் தீர்வு காணும் வழியும் அதன் பயனும்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சிவகங்கை முதன்மை மாவட்ட நீதிபதி அறிவொளி கொடியசைத்து துவக்கி வைத்தார். குடும்ப நல நீதிபதி பசும்பொன் சண்முகையா, மாவட்ட சட்டப்பணிகள் செயலாளரும், சார்பு நீதிபதியுமான அனிதா கிறிஸ்டி, மாவட்ட உரிமையியல் நீதிபதி ரமேஷ், விரைவு நீதிமன்ற நீதிபதி வள்ளி மணாளன், காரைக்குடி நீதித்துறை நடுவர் கார்மேககண்ணன், காரைக்குடி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சேதுராமன், செயலாளர் கவுதம் மற்றும் சட்டக்கல்லூரி மாணவ, மாணவிகள், வழக்கறிஞர்கள், அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர். காரைக்குடி நீதிமன்றத்தில் இருந்து தொடங்கிய இந்தப் பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது.