
மாவட்ட செய்தி🔴 உடனுக்குடன்
ஸ்ரீ இராஜ ராஜன் பொறியியல் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா
எழுத்தாளர் Sivagangai Admin · 31 ஜூலை, 2026
2 நிமிட வாசிப்பு
காரைக்குடி ஜூலை. - 31
காரைக்குடி அமராவதி புதூரில் அமைந்துள்ள ஸ்ரீ இராஜ ராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் சிவில் இன்ஜினியரிங் மாணவர்கள், காரைக்குடியில் உள்ள தலைசிறந்த கட்டிட பொறியாளர்களின் நிறுவனங்களில் 15 நாட்கள் கட்டிடக் களப்பயிற்சி பெற்றனர். அவர்களுக்கான பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா இராஜராஜன் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ இராஜ ராஜன் கல்விக் குழுமத்தின் தலைவரும் அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான முனைவர் சொ.சுப்பையா அவர்கள் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக காரைக்குடி சிவில் இன்ஜினியரிங் அசோசியேஷன் தலைவர் சோலைமலை, செயலாளர் நாச்சியப்பன், இன்ஜினியர்கள் ரெத்தினசாமி, சரவணப் பாண்டி , ஜெனித், முத்து, மோகன சுந்தரம் ஆகியோர் பங்கேற்றனர். கல்லூரியின் முதல்வர் முனைவர் முத்துக்குமார் அவர்கள் வரவேற்புரையாற்றினார். கல்லூரியின் டீன் முனைவர் சிவக்குமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
விழாவில் பேசிய முனைவர் சொ.சுப்பையா ‘இத்தகைய நேரடி பயிற்சி மாணவர்களின் செயல்திறன் அறிவை வளர்த்துக் கொள்ள உதவும். அவர்கள் வருங்காலத்தில் தொழில் முனைவோராக மாறவும் உதவும். இத்தகைய பயிற்சி அடுத்த ஆண்டு முதல் 30 நாட்கள் வழங்கப்படும்‘ என்று கூறினார். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் சோலைமலை அவர்கள் பேசுகையில் ‘இத்தகைய பயிற்சி மாணவர்களின் திறனை வளர்க்கவும், கட்டுமானப்பணியில் உள்ள நுணுக்கங்களை அறிந்து கொள்ளவும் உதவும்‘ என்று கூறினார். பயிற்சி பெற்ற 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிறைவாக சிவில் துறை தலைவர் முகிலன் அவர்கள் நன்றியுரை கூறினார். விழா ஏற்பாடுகளை பேராசிரியை அபிநயா மற்றும் பேராசிரியை ஸ்ருதி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறை தலைவர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?
மொத்த வாக்குகள்: 0
மேலும் படிக்க
🗞 மற்ற செய்திகள்(17)
மாவட்ட செய்திதேவகோட்டையில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
13 அக்டோபர், 2026
மாவட்ட செய்திபள்ளத்தூர் வாரச்சந்தையை வியாபாரிகளுக்கு உடனே வழங்கக் கோரி பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு
13 அக்டோபர், 2026
மாவட்ட செய்திஆழ்கடலில் 5 சதவீதம் மட்டுமே ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் நீலப்பொருளாதார ஆராய்ச்சியில் கூடுதல் கவனம் தேவை *கோவா தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சுனில்குமார் வேண்டுகோள்
7 அக்டோபர், 2026
மாவட்ட செய்திடாக்டர் உமையாள் ராமநாதன் 98-வது பிறந்தநாள் விழா
6 அக்டோபர், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் பிரபல துணிக்கடை முன்பு ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு
5 அக்டோபர், 2026
மாவட்ட செய்திதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் டோக்கன் கிடைத்தும் ஆதார் சிக்கலால் தங்க மோதிரம் கிடையாது என திருப்பி அனுப்பிய மருத்துவமனை நிர்வாகம் பச்சிளம் குழந்தையுடன் மகிழ்ச்சியாக காத்திருந்த பெண் ஏமாற்றம்.
3 அக்டோபர், 2026
மாவட்ட செய்திபொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாளுடன் சுற்றித்திரிந்த நபர் கைது
2 அக்டோபர், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் சமரச தீர்வு மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு
1 அக்டோபர், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் உணவுப்படி வழங்க வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தபோராட்டம்
1 அக்டோபர், 2026
மாவட்ட செய்திபள்ளத்தூர் அருகே ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் – டிரைவர் தப்பியோட்டம்
28 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திதலைமை தேர்தல் ஆணையர் பதவி நீக்க வலியுறுத்தி காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
28 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் ஆபியார் தின விழா
28 செப்டம்பர், 2026
மாவட்ட செய்தி"வாக்காளர் நீக்கத் தந்திரம், மின்சார துறையில் தனியார்மயம், போலி அரசியல் அணுகுமுறை": மத்திய - மாநில அரசுகள் மீது CPM மாநிலச் செயலாளர் சண்முகம் கடும் தாக்கு!
26 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திசிக்ரியில் பார்வையாளர் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்டுபிடிப்புகளை பார்வையிட்ட மாணவர்கள்
26 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திதேவகோட்டையில் டிஎஸ்பி தலைமையில் ரோந்து பணி
25 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை அருகே மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு போலீசார் விசாரணை
25 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திகாலை உணவு திட்டம் விரிவாக்கம்
22 செப்டம்பர், 2026


