
மாவட்ட செய்தி🔴 உடனுக்குடன்
கார் விபத்தில் பெற்றோரை இழந்தும் விடாமுயற்சியால் மருத்துவக் கல்லூரியில் இடம்பிடித்த மாணவர்
நேரில் சந்தித்து கல்வி உதவித்தொகை வழங்கிய அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு
எழுத்தாளர் Sivagangai Admin · 4 செப்டம்பர், 2026
2 நிமிட வாசிப்பு
காரைக்குடி, செப்.4-
காரைக்குடியைச் சேர்ந்த சிவக்குமார் – ஜோதிலட்சுமி தம்பதியினருக்கு சந்தோஷ் குமார் மற்றும் வேல்முருகன் என இரண்டு மகன்கள் உள்ளனர். திருப்பூரில் குடும்பத்துடன் தங்கி தனியார் உணவகத்தில் பணிபுரிந்து வந்த சிவக்குமார், கடந்த 2017ஆம் ஆண்டு தனது குடும்பத்தினருடன் காரைக்குடிக்கு காரில் வந்து கொண்டிருந்தபோது, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கார் விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் சிவக்குமார் மற்றும் அவரது மனைவி ஜோதிலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் அவர்களது மகன்களான சந்தோஷ் குமார் மற்றும் வேல்முருகன் ஆகியோரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இந்த விபத்தில் சந்தோஷ் குமாருக்கு காலில் ஊனம் ஏற்பட்டது. பெற்றோரை இழந்த இரு சகோதரர்களையும் அவர்களது தாய்மாமா பாண்டி மற்றும் அத்தை விமலா ஆகியோர் தங்களது சொந்த பிள்ளைகளைப் போல் அரவணைத்து, சிகிச்சை அளித்ததுடன் பள்ளியில் சேர்த்து தொடர்ந்து படிக்க வைத்தனர்.
தனது உடல் குறைபாட்டையும், பெற்றோரை இழந்த துயரத்தையும் கடந்து விடாமுயற்சியுடன் படித்த சந்தோஷ் குமார், காரைக்குடியில் உள்ள அரசு உதவி பெறும் எஸ்.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 510 மதிப்பெண்கள் பெற்றார்.
தொடர்ந்து, நீட் தேர்வில் 366 மதிப்பெண்கள் பெற்ற சந்தோஷ் குமாருக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டின் மூலம் சென்னை ஸ்டாலின் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பில் சேரும் வாய்ப்பு கிடைத்தது. பெற்றோரை இழந்த நிலையிலும் தனது மருத்துவக் கனவை விடாமுயற்சியுடன் நனவாக்கிய சந்தோஷ் குமாரை பாராட்டும் வகையில், இயற்கை மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு, அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்தார்.
அப்போது மாணவர் சந்தோஷ் குமாருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த அமைச்சர், கல்வி உதவித்தொகையும் வழங்கினார். மேலும், மாணவரின் மருத்துவப் படிப்பிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதியளித்தார். அமைச்சரின் இந்த உதவியால் மாணவர் சந்தோஷ் குமார், அவரது தாய்மாமா பாண்டி, அத்தை விமலா மற்றும் சகோதரர் வேல்முருகன் ஆகியோர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?
மொத்த வாக்குகள்: 0
மேலும் படிக்க
🗞 மற்ற செய்திகள்(17)
மாவட்ட செய்திதேவகோட்டையில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
13 அக்டோபர், 2026
மாவட்ட செய்திபள்ளத்தூர் வாரச்சந்தையை வியாபாரிகளுக்கு உடனே வழங்கக் கோரி பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு
13 அக்டோபர், 2026
மாவட்ட செய்திஆழ்கடலில் 5 சதவீதம் மட்டுமே ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் நீலப்பொருளாதார ஆராய்ச்சியில் கூடுதல் கவனம் தேவை *கோவா தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சுனில்குமார் வேண்டுகோள்
7 அக்டோபர், 2026
மாவட்ட செய்திடாக்டர் உமையாள் ராமநாதன் 98-வது பிறந்தநாள் விழா
6 அக்டோபர், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் பிரபல துணிக்கடை முன்பு ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு
5 அக்டோபர், 2026
மாவட்ட செய்திதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் டோக்கன் கிடைத்தும் ஆதார் சிக்கலால் தங்க மோதிரம் கிடையாது என திருப்பி அனுப்பிய மருத்துவமனை நிர்வாகம் பச்சிளம் குழந்தையுடன் மகிழ்ச்சியாக காத்திருந்த பெண் ஏமாற்றம்.
3 அக்டோபர், 2026
மாவட்ட செய்திபொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாளுடன் சுற்றித்திரிந்த நபர் கைது
2 அக்டோபர், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் சமரச தீர்வு மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு
1 அக்டோபர், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் உணவுப்படி வழங்க வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தபோராட்டம்
1 அக்டோபர், 2026
மாவட்ட செய்திபள்ளத்தூர் அருகே ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் – டிரைவர் தப்பியோட்டம்
28 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திதலைமை தேர்தல் ஆணையர் பதவி நீக்க வலியுறுத்தி காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
28 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் ஆபியார் தின விழா
28 செப்டம்பர், 2026
மாவட்ட செய்தி"வாக்காளர் நீக்கத் தந்திரம், மின்சார துறையில் தனியார்மயம், போலி அரசியல் அணுகுமுறை": மத்திய - மாநில அரசுகள் மீது CPM மாநிலச் செயலாளர் சண்முகம் கடும் தாக்கு!
26 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திசிக்ரியில் பார்வையாளர் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்டுபிடிப்புகளை பார்வையிட்ட மாணவர்கள்
26 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திதேவகோட்டையில் டிஎஸ்பி தலைமையில் ரோந்து பணி
25 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை அருகே மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு போலீசார் விசாரணை
25 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திகாலை உணவு திட்டம் விரிவாக்கம்
22 செப்டம்பர், 2026


