
மாவட்ட செய்தி🔴 உடனுக்குடன்
காரைக்குடிக்கு வருகை தந்த நாசா விஞ்ஞானி
எழுத்தாளர் Sivagangai Admin · 18 ஆகஸ்ட், 2026
2 நிமிட வாசிப்பு
காரைக்குடி, ஆக.18-
காரைக்குடி அமராவதிபுதூர் ராஜ ராஜன் பொறியியல் கல்லூரி மற்றும் ராஜ ராஜன் சி.பி.எஸ்.இ பள்ளியில் விண்வெளி தொழில்நுட்பம் குறித்து சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது. அமெரிக்காவின் நாசா விண்வெளி வீரர் டாக்டர்.டான் தாமஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இவர் நான்கு முறை விண்வெளிக்கு சென்றுள்ளார், 45 நாட்களுக்கு மேல் விண்வெளியில் இருந்து சாதனைப் புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சிக்கு ராஜ ராஜன் கல்விக் குழுமத்தின் தலைவரும் அழகப்பா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தருமான முனைவர் சொ.சுப்பையா தலைமை தாங்கினார். சென்னை நாசாவின் சி.இ.ஓ மற்றும் கோ ஃபௌன்ட் குரு நிறுவனத்தின் தலைவர் காயம்பு இராமலிங்கம், தேசிய அளவில் சிறந்த ஆசிரியர் விருது பெற்ற கவிஞர் தங்கம் மூர்த்தி, அமெரிக்காவை சேர்ந்த மருத்துவர் சதாசிவம் வாழ்த்துரை வழங்கினர். கருத்தரங்கத்தின்
சிறப்பு விருந்தினர் டாக்டர்.டான் தாமஸ், விண்வெளியில் தனது அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார். விண்வெளி தொழில்நுட்பத்தின் எதிர்கால வாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கு பதிலளித்து மாணவர்களுடன் கலந்துரையாடினார். அவருக்கு கல்லூரியின் சார்பில் "விண்வெளி சாதனையாளர் விருது" வழங்கப்பட்டது. இந்த கருத்தரங்கில் 100க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரியை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். ராஜ ராஜன் பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் முத்துக்குமார், கல்லூரியின் டீன் முனைவர் சிவக்குமார், சி.பி.எஸ்.இ பள்ளியின் முதல்வர் வடிவாம்பாள், பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரியின் தாளாளர்கள், முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?
மொத்த வாக்குகள்: 0
மேலும் படிக்க
🗞 மற்ற செய்திகள்(17)
மாவட்ட செய்திதேவகோட்டையில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
13 அக்டோபர், 2026
மாவட்ட செய்திபள்ளத்தூர் வாரச்சந்தையை வியாபாரிகளுக்கு உடனே வழங்கக் கோரி பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு
13 அக்டோபர், 2026
மாவட்ட செய்திஆழ்கடலில் 5 சதவீதம் மட்டுமே ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் நீலப்பொருளாதார ஆராய்ச்சியில் கூடுதல் கவனம் தேவை *கோவா தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சுனில்குமார் வேண்டுகோள்
7 அக்டோபர், 2026
மாவட்ட செய்திடாக்டர் உமையாள் ராமநாதன் 98-வது பிறந்தநாள் விழா
6 அக்டோபர், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் பிரபல துணிக்கடை முன்பு ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு
5 அக்டோபர், 2026
மாவட்ட செய்திதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் டோக்கன் கிடைத்தும் ஆதார் சிக்கலால் தங்க மோதிரம் கிடையாது என திருப்பி அனுப்பிய மருத்துவமனை நிர்வாகம் பச்சிளம் குழந்தையுடன் மகிழ்ச்சியாக காத்திருந்த பெண் ஏமாற்றம்.
3 அக்டோபர், 2026
மாவட்ட செய்திபொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாளுடன் சுற்றித்திரிந்த நபர் கைது
2 அக்டோபர், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் சமரச தீர்வு மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு
1 அக்டோபர், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் உணவுப்படி வழங்க வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தபோராட்டம்
1 அக்டோபர், 2026
மாவட்ட செய்திபள்ளத்தூர் அருகே ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் – டிரைவர் தப்பியோட்டம்
28 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திதலைமை தேர்தல் ஆணையர் பதவி நீக்க வலியுறுத்தி காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
28 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் ஆபியார் தின விழா
28 செப்டம்பர், 2026
மாவட்ட செய்தி"வாக்காளர் நீக்கத் தந்திரம், மின்சார துறையில் தனியார்மயம், போலி அரசியல் அணுகுமுறை": மத்திய - மாநில அரசுகள் மீது CPM மாநிலச் செயலாளர் சண்முகம் கடும் தாக்கு!
26 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திசிக்ரியில் பார்வையாளர் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்டுபிடிப்புகளை பார்வையிட்ட மாணவர்கள்
26 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திதேவகோட்டையில் டிஎஸ்பி தலைமையில் ரோந்து பணி
25 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை அருகே மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு போலீசார் விசாரணை
25 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திகாலை உணவு திட்டம் விரிவாக்கம்
22 செப்டம்பர், 2026


