
காரைக்குடி சேது பாஸ்கரா வேளாண் கல்லூரி - செம்மண் இயக்கம் சார்பில் பாரம்பரிய விதைத் திருவிழா
எழுத்தாளர் Sivagangai Admin · 13 ஆகஸ்ட், 2026
2 நிமிட வாசிப்பு
சிவகங்கை, ஆக. 9:
சிவகங்கை செம்மண் இயக்கம், சேது பாஸ்கரா வேளாண் கல்லூரி, மற்றும் தங்கமயில் ஆபரண மாளிகை சார்பில் பாரம்பரிய விதைத் திருவிழா சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
கிராமிய வாழ்வியலை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், நடைபெற்ற இந்தத் திருவிழாவில் பாரம்பரிய நெல் ரகங்கள், சிறுதானியங்கள், நாட்டுக்காய்கறி விதைகள் மற்றும் இயற்கை விவசாயத்தில் பயன்படுத்தப்படும் விதைகள் பொதுமக்கள் பார்வைக்குக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
விதைகளைப் பார்வையிட்ட விவசாயிகள், அவற்றின் சாகுபடி முறைகள் மற்றும் பயன்கள் குறித்து கேட்டறிந்தனர். பழங்காலத்தில் நமது முன்னோர்கள் பயன்படுத்திய விவசாயக் கருவிகள், மண்பாண்டங்கள், மரப் பொருட்கள் மற்றும் பாரம்பரிய சமையல் உபகரணங்கள் போன்றவை பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. அத்துடன், பாரம்பரிய உணவு தயாரித்தல், சிறுதானியங்களைக் கொண்டு அடுப்பில்லா உணவு முறைகள், பண்டைய கால சமையல் கலைகள் குறித்த பயிற்சிகளும் விளக்கங்களும் பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டன. விழாவின் சிறப்பம்சமாக இளவட்டக் கல் தூக்குதல், சிலம்பாட்டம், ஜல்லிக்கட்டு காளைகளுடனான பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன. கம்பு, கேழ்வரகு, சோளம், தினை, சாமை, வரகு உள்ளிட்ட சிறுதானியங்களால் செய்யப்பட்ட சுவையான உணவுகளும், பாரம்பரிய அரிசி உணவு வகைகளும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. மேலும் கால்நடை வளர்ப்பு, நாட்டு மாடுகள் பராமரிப்பு, பாரம்பரிய வேளாண் உற்பத்திப் பொருட்கள் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தொடர்பான பல அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன.
விழிப்புணர்வுப் பேரணி:
முன்னதாக பாரம்பரிய விளையாட்டுக்கள் மற்றும் மரபு விதைகளின் முக்கியத்துவத்தை அடுத்த தலைமுறைக்கு உணர்த்தும் விதமாக சிவகங்கை பேருந்து நிலையத்திலிருந்து மன்னர் பள்ளி வரை விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இதில் சேது பாஸ்கரா வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதலாமாண்டு மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்தப் பேரணியை சேது பாஸ்கரா வேளாண் கல்லூரித் தலைவர் தாளாளர் சேது குமணன் தொடங்கி வைத்தார். நிகழ்வில் கல்லூரி முதல்வர் வி. பேபி ராணி, சென்னை அம்பத்தூர் சோகா இகேதா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் துணை முதல்வர் கண்மணி சுப்பிரமணியன் கலந்து கொண்டனர். செம்மண் இயக்க நிர்வாகிகளான செம்மண் சேதுபதி கதிர் முருகன், ஹரிஹரன், அறிவு கண்ணன், ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?
மொத்த வாக்குகள்: 0
மேலும் படிக்க
🗞 மற்ற செய்திகள்(17)
மாவட்ட செய்திதேவகோட்டையில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
13 அக்டோபர், 2026
மாவட்ட செய்திபள்ளத்தூர் வாரச்சந்தையை வியாபாரிகளுக்கு உடனே வழங்கக் கோரி பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு
13 அக்டோபர், 2026
மாவட்ட செய்திஆழ்கடலில் 5 சதவீதம் மட்டுமே ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் நீலப்பொருளாதார ஆராய்ச்சியில் கூடுதல் கவனம் தேவை *கோவா தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சுனில்குமார் வேண்டுகோள்
7 அக்டோபர், 2026
மாவட்ட செய்திடாக்டர் உமையாள் ராமநாதன் 98-வது பிறந்தநாள் விழா
6 அக்டோபர், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் பிரபல துணிக்கடை முன்பு ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு
5 அக்டோபர், 2026
மாவட்ட செய்திதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் டோக்கன் கிடைத்தும் ஆதார் சிக்கலால் தங்க மோதிரம் கிடையாது என திருப்பி அனுப்பிய மருத்துவமனை நிர்வாகம் பச்சிளம் குழந்தையுடன் மகிழ்ச்சியாக காத்திருந்த பெண் ஏமாற்றம்.
3 அக்டோபர், 2026
மாவட்ட செய்திபொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாளுடன் சுற்றித்திரிந்த நபர் கைது
2 அக்டோபர், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் சமரச தீர்வு மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு
1 அக்டோபர், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் உணவுப்படி வழங்க வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தபோராட்டம்
1 அக்டோபர், 2026
மாவட்ட செய்திபள்ளத்தூர் அருகே ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் – டிரைவர் தப்பியோட்டம்
28 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திதலைமை தேர்தல் ஆணையர் பதவி நீக்க வலியுறுத்தி காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
28 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் ஆபியார் தின விழா
28 செப்டம்பர், 2026
மாவட்ட செய்தி"வாக்காளர் நீக்கத் தந்திரம், மின்சார துறையில் தனியார்மயம், போலி அரசியல் அணுகுமுறை": மத்திய - மாநில அரசுகள் மீது CPM மாநிலச் செயலாளர் சண்முகம் கடும் தாக்கு!
26 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திசிக்ரியில் பார்வையாளர் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்டுபிடிப்புகளை பார்வையிட்ட மாணவர்கள்
26 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திதேவகோட்டையில் டிஎஸ்பி தலைமையில் ரோந்து பணி
25 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை அருகே மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு போலீசார் விசாரணை
25 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திகாலை உணவு திட்டம் விரிவாக்கம்
22 செப்டம்பர், 2026


