
மாவட்ட செய்தி🔴 உடனுக்குடன்
இலுப்பக்குடி ஸ்ரீ சுயம்பிரகாஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
நெரிசலில் மயக்கம் அடைந்த பெண்ணை மீட்டு தனது வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர்
எழுத்தாளர் Sivagangai Admin · 17 செப்டம்பர், 2026
2 நிமிட வாசிப்பு
காரைக்குடி, செப்.17-
காரைக்குடி அருகே ஸ்ரீ சுயம்பிரகாஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. கனிமவளத் துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு பங்கேற்றார். கும்பாபிஷேகம் முடிந்து வரும் பொழுது கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கம் அடைந்த பெண் ஒருவரை தனது பாதுகாவலர்கள் வாகனத்தில் ஏற்றி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தார் அமைச்சர்.
காரைக்குடி அருகே உள்ள இலுப்பக்குடியில் புகழ்பெற்ற நகரத்தார் ஒன்பது நகரக் கோயில்களில் ஒன்றான, ஸ்ரீ சௌந்தரநாயகி அம்பாள் சமேத ஸ்ரீ சுயம்பிரகாஸ்வரர் எனும் தான்தோன்றீஸ்வரர் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக பெருவிழா வெகு விமரிசையாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது. இதில்கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி கே பிரபு கலந்து கொண்டார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, தனபூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் மற்றும் கால யாகசாலை வேள்விகள் நடைபெற்றன. புண்ணிய தீர்த்தங்கள் அடங்கிய கலசங்கள் யாகசாலையில் வைத்து, வேத மந்திரங்கள் மற்றும் திருமுறை பாராயணங்கள் முழங்க சிறப்பு வேள்விகள் நடைபெற்றன.
முக்கிய நிகழ்வாக இன்று காலை யாகசாலையில் இருந்து புனித கடம் புறப்பாடு நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் புனித கடத்தை கோயிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துச் சென்று விமான நிலையை அடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கவும், மங்கள வாத்தியங்கள் இசைக்கவும், ஸ்ரீ சுயம்பிரகாஸ்வரர் மற்றும் ஸ்ரீ சௌந்தரநாயகி அம்பாள் சன்னதிகளின் விமானக் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை காண திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், “ஹர ஹர மகாதேவா”, “தென்னாடுடைய சிவனே போற்றி” என பக்தி முழக்கமிட்டு சுவாமியை வழிபட்டனர்.
தொடர்ந்து மூலவர் ஸ்ரீ சுயம்பிரகாஸ்வரர் மற்றும் ஸ்ரீ சௌந்தரநாயகி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமின்றி பல்வேறு ஊர்களில் இருந்தும் நாட்டார்,மற்றும் நகரத்தார் பெருமக்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற பின்பு அமைச்சர் காரைக்குடி நோக்கி வரும்பொழுது கூட்டம் நெரிசலில் பெண் ஒருவர் மயக்கம் அடைந்தார். அவரை தனது பாதுகாவலர் வாகனத்தில் ஏற்றி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதித்தார்.
இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?
மொத்த வாக்குகள்: 0
மேலும் படிக்க
🗞 மற்ற செய்திகள்(17)
மாவட்ட செய்திதேவகோட்டையில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
13 அக்டோபர், 2026
மாவட்ட செய்திபள்ளத்தூர் வாரச்சந்தையை வியாபாரிகளுக்கு உடனே வழங்கக் கோரி பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு
13 அக்டோபர், 2026
மாவட்ட செய்திஆழ்கடலில் 5 சதவீதம் மட்டுமே ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் நீலப்பொருளாதார ஆராய்ச்சியில் கூடுதல் கவனம் தேவை *கோவா தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சுனில்குமார் வேண்டுகோள்
7 அக்டோபர், 2026
மாவட்ட செய்திடாக்டர் உமையாள் ராமநாதன் 98-வது பிறந்தநாள் விழா
6 அக்டோபர், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் பிரபல துணிக்கடை முன்பு ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு
5 அக்டோபர், 2026
மாவட்ட செய்திதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் டோக்கன் கிடைத்தும் ஆதார் சிக்கலால் தங்க மோதிரம் கிடையாது என திருப்பி அனுப்பிய மருத்துவமனை நிர்வாகம் பச்சிளம் குழந்தையுடன் மகிழ்ச்சியாக காத்திருந்த பெண் ஏமாற்றம்.
3 அக்டோபர், 2026
மாவட்ட செய்திபொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாளுடன் சுற்றித்திரிந்த நபர் கைது
2 அக்டோபர், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் சமரச தீர்வு மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு
1 அக்டோபர், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் உணவுப்படி வழங்க வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தபோராட்டம்
1 அக்டோபர், 2026
மாவட்ட செய்திபள்ளத்தூர் அருகே ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் – டிரைவர் தப்பியோட்டம்
28 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திதலைமை தேர்தல் ஆணையர் பதவி நீக்க வலியுறுத்தி காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
28 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் ஆபியார் தின விழா
28 செப்டம்பர், 2026
மாவட்ட செய்தி"வாக்காளர் நீக்கத் தந்திரம், மின்சார துறையில் தனியார்மயம், போலி அரசியல் அணுகுமுறை": மத்திய - மாநில அரசுகள் மீது CPM மாநிலச் செயலாளர் சண்முகம் கடும் தாக்கு!
26 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திசிக்ரியில் பார்வையாளர் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்டுபிடிப்புகளை பார்வையிட்ட மாணவர்கள்
26 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திதேவகோட்டையில் டிஎஸ்பி தலைமையில் ரோந்து பணி
25 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை அருகே மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு போலீசார் விசாரணை
25 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திகாலை உணவு திட்டம் விரிவாக்கம்
22 செப்டம்பர், 2026


