
மாவட்ட செய்தி🔴 உடனுக்குடன்
சருகணி உதயா மகளிர் கல்லூரியில் கல்லூரிகளுக்கு இடையிலான போட்டி
எழுத்தாளர் KANNAN · 11 செப்டம்பர், 2026
2 நிமிட வாசிப்பு
தேவகோட்டை அருகே சருகணி இதயா மகளிர் கல்லூரியில் கல்லூரிகளுக்கு இடையேயான மாநில அளவிலான போட்டிகள் நடைபெற்றது
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டம் சருகணி இதயா மகளிர் கல்லூரியில் கணினிப் பயன்பாட்டியல் துறையினர் சார்பாக பல்வேறு கல்லூரிகளுக்கு இடையேயான தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாரா போட்டிகள் கல்லூரி செயலர் முனைவர் அருட்சகோதரி பாத்திமா பவுலா மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் அருட்சகோதரி மெல்டிந்தா மேரி தலைமையில் நடைபெற்றன. நிகழ்ச்சியில் புனிதா மேரி வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் மெல்திந்தா மேரி தலைமை உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் உயிரிதகவலியல் துறையின் உதவிப் பேராசிரியை முனைவர் வித்யாவதி கலந்து கொண்டார்
இப்போட்டிகளில் வேலு மனோகரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,ஸ்ரீ சாரதா நிகேதன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆனந்தா கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் துறைகள், நாச்சியப்பா சுவாமிகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,மதுரை சிவகாசி நாடார் பெண்கள் கல்லூரியின் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் கணினி அறிவியல் துறைகள் உள்ளிட்ட கல்லூரிகள் பங்கேற்றன.
தொழில்நுட்பப் பிரிவில் கட்டுரை வழங்குதல் (Paper Presentation), செயற்கை நுண்ணறிவு காணொளி உருவாக்கம் (AI Video Making), இணையதள வடிவமைப்பு (Web Designing), நிரல் உருவாக்கம் (Program Development) ஆகிய போட்டிகள் நடைபெற்றன. தொழில்நுட்பம் சாரா பிரிவில் மைம்,கருத்துக்கரு நடனம்,கோலப்போட்டி,மின்னணுக் கழிவுகளில் இருந்து கலைப்பொருள் உருவாக்கம்,முக ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.
பல்வேறு போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்ட வேலு மனோகரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணினி அறிவியல் துறை ஒட்டுமொத்த வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டு சாம்பியன் பட்டத்தைப் பெற்றது.மதுரை சிவகாசி நாடார் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இரண்டாம் இடத்தைப் பெற்று வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு அருள் அன்னை முனைவர் பாத்திமா பவுலா கேடயங்களை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சி மாணவர்களின் தொழில்நுட்பத் திறன்,படைப்பாற்றல் மற்றும் கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பாக அமைந்தது.இந்நிகழ்ச்சியில் கல்லூரிகளின் பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்
இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?
மொத்த வாக்குகள்: 0
மேலும் படிக்க
🗞 மற்ற செய்திகள்(17)
மாவட்ட செய்திதேவகோட்டையில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
13 அக்டோபர், 2026
மாவட்ட செய்திபள்ளத்தூர் வாரச்சந்தையை வியாபாரிகளுக்கு உடனே வழங்கக் கோரி பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு
13 அக்டோபர், 2026
மாவட்ட செய்திஆழ்கடலில் 5 சதவீதம் மட்டுமே ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் நீலப்பொருளாதார ஆராய்ச்சியில் கூடுதல் கவனம் தேவை *கோவா தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சுனில்குமார் வேண்டுகோள்
7 அக்டோபர், 2026
மாவட்ட செய்திடாக்டர் உமையாள் ராமநாதன் 98-வது பிறந்தநாள் விழா
6 அக்டோபர், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் பிரபல துணிக்கடை முன்பு ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு
5 அக்டோபர், 2026
மாவட்ட செய்திதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் டோக்கன் கிடைத்தும் ஆதார் சிக்கலால் தங்க மோதிரம் கிடையாது என திருப்பி அனுப்பிய மருத்துவமனை நிர்வாகம் பச்சிளம் குழந்தையுடன் மகிழ்ச்சியாக காத்திருந்த பெண் ஏமாற்றம்.
3 அக்டோபர், 2026
மாவட்ட செய்திபொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாளுடன் சுற்றித்திரிந்த நபர் கைது
2 அக்டோபர், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் சமரச தீர்வு மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு
1 அக்டோபர், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் உணவுப்படி வழங்க வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தபோராட்டம்
1 அக்டோபர், 2026
மாவட்ட செய்திபள்ளத்தூர் அருகே ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் – டிரைவர் தப்பியோட்டம்
28 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திதலைமை தேர்தல் ஆணையர் பதவி நீக்க வலியுறுத்தி காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
28 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் ஆபியார் தின விழா
28 செப்டம்பர், 2026
மாவட்ட செய்தி"வாக்காளர் நீக்கத் தந்திரம், மின்சார துறையில் தனியார்மயம், போலி அரசியல் அணுகுமுறை": மத்திய - மாநில அரசுகள் மீது CPM மாநிலச் செயலாளர் சண்முகம் கடும் தாக்கு!
26 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திசிக்ரியில் பார்வையாளர் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்டுபிடிப்புகளை பார்வையிட்ட மாணவர்கள்
26 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திதேவகோட்டையில் டிஎஸ்பி தலைமையில் ரோந்து பணி
25 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை அருகே மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு போலீசார் விசாரணை
25 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திகாலை உணவு திட்டம் விரிவாக்கம்
22 செப்டம்பர், 2026


