
மாவட்ட செய்தி🔴 உடனுக்குடன்
காரைக்குடியில்100 கோடி மதிப்புள்ள கோவில் இடத்தை ஆக்கிரமித்து விற்க முயற்சி என புகார்
கோவில் சொத்து விற்பனை முறை கேடு போல காரைக்குடியிலும் தேவஸ்தான கோவில் சொத்து முறைகேடாக விற்பனை செய்ய முயற்சியால் பரபரப்பு
எழுத்தாளர் Sivagangai Admin · 22 ஜூலை, 2026
2 நிமிட வாசிப்பு
காரைக்குடி, ஜூன் 22&
காரைக்குடி அருகே உள்ள இலுப்பக்குடி அருள்மிகு சுயம்பிரகாசேசுவர் கோவில் தேவஸ்தானத்திற்கு காரைக்குடி, இலுப்பக்குடி, புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலங்களை அவ்வப்போது தனியார்கள் ஆக்கிரமிப்பதும், அதை மீட்க அறநிலையத்துறை போராடுவதும் தொன்று தொட்டு வழக்கமாக உள்ளது. அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள நகரத்தார் 9 கோவில்களில் ஒன்றாகும் பரம்பரை அறங்காவலர்களால் சுழற்சி முறையில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அதன்படி காரைக்குடி முடியரசன் சாலையில் குறிச்சிபுரவு பகுதியில் சுமார் 2.5 ஏக்கர் நிலம் உள்ளது. இலுப்பக்குடி தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட இடம் என ஏற்கனவே அங்கு போர்டு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த இடத்தை ஒரு சிலர் இன்று காலை ஜே.சி.பி., துணையுடன் சுத்தம் செய்ய முயன்றனர். இதையடுத்து இலுப்பக்குடி பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காரைக்குடி வட்டாட்சியர் ராஜா, வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் இளையராஜா ஆகியோர் நிலத்தை சுத்தம் செய்யும் பணிகளை நிறுத்தி ஜே.சி.பி., வாகனங்களை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்.
தொடர்ந்து தாலுகா அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையின்போது, இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பழநியைபோல காரைக்குடியிலும் கோயில் நில ஆக்கிரமிப்பு புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனு.
குறிப்பு : 2011 ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கோவில் நில அபகரிப்பு என இதே இடத்தை பத்திர பதிவு செய்து பட்டா பெற்று இருந்து நான்கு பெயர்கள் பெயரில் இருந்த பட்டாக்கள் ரத்து செய்து அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?
மொத்த வாக்குகள்: 0
மேலும் படிக்க
🗞 மற்ற செய்திகள்(17)
மாவட்ட செய்திதேவகோட்டையில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
13 அக்டோபர், 2026
மாவட்ட செய்திபள்ளத்தூர் வாரச்சந்தையை வியாபாரிகளுக்கு உடனே வழங்கக் கோரி பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு
13 அக்டோபர், 2026
மாவட்ட செய்திஆழ்கடலில் 5 சதவீதம் மட்டுமே ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் நீலப்பொருளாதார ஆராய்ச்சியில் கூடுதல் கவனம் தேவை *கோவா தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சுனில்குமார் வேண்டுகோள்
7 அக்டோபர், 2026
மாவட்ட செய்திடாக்டர் உமையாள் ராமநாதன் 98-வது பிறந்தநாள் விழா
6 அக்டோபர், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் பிரபல துணிக்கடை முன்பு ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு
5 அக்டோபர், 2026
மாவட்ட செய்திதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் டோக்கன் கிடைத்தும் ஆதார் சிக்கலால் தங்க மோதிரம் கிடையாது என திருப்பி அனுப்பிய மருத்துவமனை நிர்வாகம் பச்சிளம் குழந்தையுடன் மகிழ்ச்சியாக காத்திருந்த பெண் ஏமாற்றம்.
3 அக்டோபர், 2026
மாவட்ட செய்திபொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாளுடன் சுற்றித்திரிந்த நபர் கைது
2 அக்டோபர், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் சமரச தீர்வு மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு
1 அக்டோபர், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் உணவுப்படி வழங்க வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தபோராட்டம்
1 அக்டோபர், 2026
மாவட்ட செய்திபள்ளத்தூர் அருகே ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் – டிரைவர் தப்பியோட்டம்
28 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திதலைமை தேர்தல் ஆணையர் பதவி நீக்க வலியுறுத்தி காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
28 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் ஆபியார் தின விழா
28 செப்டம்பர், 2026
மாவட்ட செய்தி"வாக்காளர் நீக்கத் தந்திரம், மின்சார துறையில் தனியார்மயம், போலி அரசியல் அணுகுமுறை": மத்திய - மாநில அரசுகள் மீது CPM மாநிலச் செயலாளர் சண்முகம் கடும் தாக்கு!
26 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திசிக்ரியில் பார்வையாளர் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்டுபிடிப்புகளை பார்வையிட்ட மாணவர்கள்
26 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திதேவகோட்டையில் டிஎஸ்பி தலைமையில் ரோந்து பணி
25 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை அருகே மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு போலீசார் விசாரணை
25 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திகாலை உணவு திட்டம் விரிவாக்கம்
22 செப்டம்பர், 2026


