
செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில் மாணவர் தலைமைப் பொறுப்பேற்பு விழா
எழுத்தாளர் Sivagangai Admin · 22 ஜூலை, 2026
2 நிமிட வாசிப்பு
காரைக்குடி, ஜூன் 22-
காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேசப்பள்ளியில் 2026–27 கல்வியாண்டிற்கான மாணவர் தலைமைத் தேர்வுக்கான தேர்தலில் மாணவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். தொடர்ந்து தகுதியான வேட்பாளர்களுக்காக மாதிரி கணினி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் தேர்தல் நடத்தப்பட்டது. இத்தேர்தலில் மூன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் வாக்களிக்கும் உரிமை பெற்று தங்களது கடமையை நிறைவேற்றினர்.
வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டதில், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர் கார்த்திக் சூர்யா 688 வாக்குகள் பெற்று பள்ளித் தலைவராகவும், பழனி குமரன் 396 வாக்குகள் பெற்று துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்களுக்கான பதவியேற்பு விழா பள்ளி விழா அரங்கில் நடைபெற்றது. மத்திய தொழில் பாதுகாப்புப் படை தலைமை தளபதி அசோக் ஜல்வாணியா மாணவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பள்ளியின் தாளாளர் செ.சத்தியன் தலைமை வகித்தார். பள்ளி நிர்வாக இயக்குநர் சங்கீதா சத்தியன் முன்னிலை வகித்தார். கல்வி இயக்குநர் டாக்டர். ராஜேஸ்வரி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். பள்ளி முதல்வர் லூயிசா ரெமி வரவேற்புரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினர் தனது உரையில், "இன்று நீங்கள் பள்ளியில் கற்றுக்கொள்ளும் தலைமைப் பண்புகளும் ஒழுக்கமும், நாளை சமூகத்தில் உங்களை உயர்ந்த இடத்தில் நிலைநிறுத்த அடித்தளமாக அமையும். இந்தப் பள்ளியில் ஜனநாயக முறையில் நடைபெற்ற தேர்தல், மாணவர்களை எதிர்கால இந்தியாவின் பொறுப்புள்ள குடிமக்களாகவும் தலைவர்களாகவும் உருவாக்கும். இன்று பள்ளியில் நீங்கள் அளிக்கும் வாக்கு, நாளைய இந்தியத் தேர்தலில் பொறுப்புடன் வாக்களிக்கும் பண்பை வளர்க்கும் முன்னோட்டமாகும்" என்று குறிப்பிட்டார். தொடர்ந்து பள்ளி மாணவத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் விளையாட்டுப் பிரிவு தலைவர் பதவிகள் வழங்கப்பட்டு, அவர்களுக்கான பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டன.
இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?
மொத்த வாக்குகள்: 0
மேலும் படிக்க
🗞 மற்ற செய்திகள்(17)
மாவட்ட செய்திதேவகோட்டையில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
13 அக்டோபர், 2026
மாவட்ட செய்திபள்ளத்தூர் வாரச்சந்தையை வியாபாரிகளுக்கு உடனே வழங்கக் கோரி பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு
13 அக்டோபர், 2026
மாவட்ட செய்திஆழ்கடலில் 5 சதவீதம் மட்டுமே ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் நீலப்பொருளாதார ஆராய்ச்சியில் கூடுதல் கவனம் தேவை *கோவா தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சுனில்குமார் வேண்டுகோள்
7 அக்டோபர், 2026
மாவட்ட செய்திடாக்டர் உமையாள் ராமநாதன் 98-வது பிறந்தநாள் விழா
6 அக்டோபர், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் பிரபல துணிக்கடை முன்பு ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு
5 அக்டோபர், 2026
மாவட்ட செய்திதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் டோக்கன் கிடைத்தும் ஆதார் சிக்கலால் தங்க மோதிரம் கிடையாது என திருப்பி அனுப்பிய மருத்துவமனை நிர்வாகம் பச்சிளம் குழந்தையுடன் மகிழ்ச்சியாக காத்திருந்த பெண் ஏமாற்றம்.
3 அக்டோபர், 2026
மாவட்ட செய்திபொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாளுடன் சுற்றித்திரிந்த நபர் கைது
2 அக்டோபர், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் சமரச தீர்வு மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு
1 அக்டோபர், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் உணவுப்படி வழங்க வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தபோராட்டம்
1 அக்டோபர், 2026
மாவட்ட செய்திபள்ளத்தூர் அருகே ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் – டிரைவர் தப்பியோட்டம்
28 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திதலைமை தேர்தல் ஆணையர் பதவி நீக்க வலியுறுத்தி காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
28 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் ஆபியார் தின விழா
28 செப்டம்பர், 2026
மாவட்ட செய்தி"வாக்காளர் நீக்கத் தந்திரம், மின்சார துறையில் தனியார்மயம், போலி அரசியல் அணுகுமுறை": மத்திய - மாநில அரசுகள் மீது CPM மாநிலச் செயலாளர் சண்முகம் கடும் தாக்கு!
26 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திசிக்ரியில் பார்வையாளர் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்டுபிடிப்புகளை பார்வையிட்ட மாணவர்கள்
26 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திதேவகோட்டையில் டிஎஸ்பி தலைமையில் ரோந்து பணி
25 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை அருகே மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு போலீசார் விசாரணை
25 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திகாலை உணவு திட்டம் விரிவாக்கம்
22 செப்டம்பர், 2026


