
மாவட்ட செய்தி🔴 உடனுக்குடன்
செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவர்களின் ஆஸ்திரேலியக் கல்விப் பயணம்
எழுத்தாளர் Sivagangai Admin · 3 செப்டம்பர், 2026
2 நிமிட வாசிப்பு
காரைக்குடி, செப்.3-
செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவர்கள், Global Design Challenge (GDC) 2026 நிகழ்வின் ஒரு பகுதியாக ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள Swinburne University யின் ஒரு அங்கமான KIOSC(Knox Innovation Opportunity and Sustainability Centre) - கிற்கு கல்விப் பயணம் மேற்கொண்டனர்.
மாணவர்களுக்கு இப்பயணம் சர்வதேசக் கல்வி, STEM கற்றல், தொழில்நுட்பம், புதுமை மற்றும் கலாச்சாரப் பரிமாற்றம் குறித்த சிறந்த அனுபவத்தை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
மாணவர்கள் Knox Innovation Opportunity and Sustainability Centre (KIOSC)-இல் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று, அதன் பல்வேறு பிரிவுகளைப் பார்வையிட்டனர். மேலும், Melbourne Girls College (MGC) மாணவர்களுடன் இணைந்து கணிதம், அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட வகுப்புகளில் பங்கேற்றனர்.
கல்விப் பயணத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக Gippsland பகுதியில் நடைபெற்ற Hydrogen Car Race போட்டியை மாணவர்கள் நேரில் கண்டுகளித்தனர்.
மாணவர்கள் Victorian Education Department அதிகாரிகள் மற்றும் இந்தியாவின் துணைத் தூதரக அதிகாரி அனிஷ் ராஜன் ஆகியோரைச் சந்தித்து உரையாடினர்.
STEM கற்றலின் ஒரு பகுதியாக ட்ரோன்கள், LEGO பொறியியல் கருவிகள், கணித அடிப்படையிலான சூழ்நிலைத் தீர்வுகள் மற்றும் வெப்பநிலைப் பதிவேற்றம் உள்ளிட்ட செயல்பாடுகளில் மாணவர்கள் ஈடுபட்டனர். இதன் மூலம் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத்தை நடைமுறை அனுபவத்தின் வாயிலாகக் கற்றுக்கொண்டனர்.
மாணவர்கள் Virtual Universe மூலம் சூரியக் குடும்பம் குறித்த மெய்நிகர் கற்றல் அமர்விலும் பங்கேற்றனர். மேலும், Factory of the Future-ஐப் பார்வையிட்டு, மனித உருவ ரோபோ உள்ளிட்ட நவீன ரோபோக்களின் செயல்பாடுகளை அறிந்துகொண்டனர்.
இதனுடன், Koala Sanctuary, Churchill Island, Phillip Island மற்றும் Melbourne Museum ஆகிய இடங்களையும் பார்வையிட்டனர். இதன் மூலம் ஆஸ்திரேலியாவின் வனவிலங்கு, சுற்றுச்சூழல், வரலாறு மற்றும் கலாச்சாரம் குறித்தும் அறிந்துகொண்டனர்.
செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவர்களின் இந்த ஆஸ்திரேலியக் கல்விப் பயணம், கல்வி, STEM தொழில்நுட்பம், புதுமை, கலாச்சாரப் பரிமாற்றம் மற்றும் நடைமுறை அனுபவம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் சிறப்பான கற்றல் அனுபவமாக அமைந்துள்ளது.
இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?
மொத்த வாக்குகள்: 0
மேலும் படிக்க
🗞 மற்ற செய்திகள்(17)
மாவட்ட செய்திதேவகோட்டையில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
13 அக்டோபர், 2026
மாவட்ட செய்திபள்ளத்தூர் வாரச்சந்தையை வியாபாரிகளுக்கு உடனே வழங்கக் கோரி பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு
13 அக்டோபர், 2026
மாவட்ட செய்திஆழ்கடலில் 5 சதவீதம் மட்டுமே ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் நீலப்பொருளாதார ஆராய்ச்சியில் கூடுதல் கவனம் தேவை *கோவா தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சுனில்குமார் வேண்டுகோள்
7 அக்டோபர், 2026
மாவட்ட செய்திடாக்டர் உமையாள் ராமநாதன் 98-வது பிறந்தநாள் விழா
6 அக்டோபர், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் பிரபல துணிக்கடை முன்பு ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு
5 அக்டோபர், 2026
மாவட்ட செய்திதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் டோக்கன் கிடைத்தும் ஆதார் சிக்கலால் தங்க மோதிரம் கிடையாது என திருப்பி அனுப்பிய மருத்துவமனை நிர்வாகம் பச்சிளம் குழந்தையுடன் மகிழ்ச்சியாக காத்திருந்த பெண் ஏமாற்றம்.
3 அக்டோபர், 2026
மாவட்ட செய்திபொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாளுடன் சுற்றித்திரிந்த நபர் கைது
2 அக்டோபர், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் சமரச தீர்வு மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு
1 அக்டோபர், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் உணவுப்படி வழங்க வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தபோராட்டம்
1 அக்டோபர், 2026
மாவட்ட செய்திபள்ளத்தூர் அருகே ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் – டிரைவர் தப்பியோட்டம்
28 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திதலைமை தேர்தல் ஆணையர் பதவி நீக்க வலியுறுத்தி காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
28 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் ஆபியார் தின விழா
28 செப்டம்பர், 2026
மாவட்ட செய்தி"வாக்காளர் நீக்கத் தந்திரம், மின்சார துறையில் தனியார்மயம், போலி அரசியல் அணுகுமுறை": மத்திய - மாநில அரசுகள் மீது CPM மாநிலச் செயலாளர் சண்முகம் கடும் தாக்கு!
26 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திசிக்ரியில் பார்வையாளர் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்டுபிடிப்புகளை பார்வையிட்ட மாணவர்கள்
26 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திதேவகோட்டையில் டிஎஸ்பி தலைமையில் ரோந்து பணி
25 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை அருகே மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு போலீசார் விசாரணை
25 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திகாலை உணவு திட்டம் விரிவாக்கம்
22 செப்டம்பர், 2026


