
மாவட்ட செய்தி🔴 உடனுக்குடன்
பெண்கள் குறித்து இழிவாக பேசியதாக குற்றச்சாட்டு: உதயநிதி மீது நடவடிக்கை கோரி தவெக மகளிர் அணி புகார்.
எழுத்தாளர் Sivagangai Admin · 4 ஆகஸ்ட், 2026
1 நிமிட வாசிப்பு
காரைக்குடி, ஜூலை 4-
பெண்கள் குறித்து திமுக இளைஞரணி செயலாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் இழிவாக பேசியதாகக் குற்றம்சாட்டி, தமிழக வெற்றிக் கழக (தவெக) மகளிர் அணியினர் காரைக்குடி கூடுதல் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.
காரைக்குடி முடியரசன் சாலையில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்திலிருந்து 200-க்கும் மேற்பட்ட மகளிர் அணியினரும், கட்சித் தொண்டர்களும் கைகளில் பதாகைகள் ஏந்தி பேரணியாக புறப்பட்டனர்.
பேரணியின் போது உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். பின்னர், காரைக்குடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் புனியாவிடம் புகார் மனுவை வழங்கினர். அந்த மனுவில், பெண்கள் குறித்து இழிவாக பேசியதாகக் கூறப்படும் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்தப் பேரணி மற்றும் மனு அளிக்கும் நிகழ்வில் தமிழக வெற்றிக் கழக மகளிர் அணியினருடன் ஏராளமான கட்சித் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?
மொத்த வாக்குகள்: 0
மேலும் படிக்க
🗞 மற்ற செய்திகள்(17)
மாவட்ட செய்திதேவகோட்டையில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
13 அக்டோபர், 2026
மாவட்ட செய்திபள்ளத்தூர் வாரச்சந்தையை வியாபாரிகளுக்கு உடனே வழங்கக் கோரி பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு
13 அக்டோபர், 2026
மாவட்ட செய்திஆழ்கடலில் 5 சதவீதம் மட்டுமே ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் நீலப்பொருளாதார ஆராய்ச்சியில் கூடுதல் கவனம் தேவை *கோவா தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சுனில்குமார் வேண்டுகோள்
7 அக்டோபர், 2026
மாவட்ட செய்திடாக்டர் உமையாள் ராமநாதன் 98-வது பிறந்தநாள் விழா
6 அக்டோபர், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் பிரபல துணிக்கடை முன்பு ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு
5 அக்டோபர், 2026
மாவட்ட செய்திதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் டோக்கன் கிடைத்தும் ஆதார் சிக்கலால் தங்க மோதிரம் கிடையாது என திருப்பி அனுப்பிய மருத்துவமனை நிர்வாகம் பச்சிளம் குழந்தையுடன் மகிழ்ச்சியாக காத்திருந்த பெண் ஏமாற்றம்.
3 அக்டோபர், 2026
மாவட்ட செய்திபொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாளுடன் சுற்றித்திரிந்த நபர் கைது
2 அக்டோபர், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் சமரச தீர்வு மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு
1 அக்டோபர், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் உணவுப்படி வழங்க வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தபோராட்டம்
1 அக்டோபர், 2026
மாவட்ட செய்திபள்ளத்தூர் அருகே ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் – டிரைவர் தப்பியோட்டம்
28 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திதலைமை தேர்தல் ஆணையர் பதவி நீக்க வலியுறுத்தி காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
28 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் ஆபியார் தின விழா
28 செப்டம்பர், 2026
மாவட்ட செய்தி"வாக்காளர் நீக்கத் தந்திரம், மின்சார துறையில் தனியார்மயம், போலி அரசியல் அணுகுமுறை": மத்திய - மாநில அரசுகள் மீது CPM மாநிலச் செயலாளர் சண்முகம் கடும் தாக்கு!
26 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திசிக்ரியில் பார்வையாளர் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்டுபிடிப்புகளை பார்வையிட்ட மாணவர்கள்
26 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திதேவகோட்டையில் டிஎஸ்பி தலைமையில் ரோந்து பணி
25 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை அருகே மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு போலீசார் விசாரணை
25 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திகாலை உணவு திட்டம் விரிவாக்கம்
22 செப்டம்பர், 2026


