
மாவட்ட செய்தி🔴 உடனுக்குடன்
முள்ளங்காடு கிராமத்தில் பூட்டி வைக்கப்பட்டிருந்த 5 ஐம்பொன் சிலைகள் மீட்பு
புளியங்குடியிருப்பு கிராம மக்களிடம் ஒப்படைப்பு! இரு கிராமங்களில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு
எழுத்தாளர் Sivagangai Admin · 18 செப்டம்பர், 2026
2 நிமிட வாசிப்பு
காரைக்குடி, ஆக.19-
காரைக்குடி அருகே உள்ள முள்ளங்காடு மற்றும் புளியங்குடியிருப்பு கிராமமக்கள் ஓராண்டு ஒரு ஊரிலும் மற்றொரு ஆண்டு ஒரு ஊரிலும் விநாயகர், அய்யனார், பூரணித்தாள், பொற்கொடியாத்தாள் மற்றும் கருப்பசாமி என 5 ஐம்பொன் உற்சவர் சிலைகள் வைத்து திருவிழா நடத்தி வந்ததாக கூறப்படுகிறது
இந்த சிலைகளை இரு கிராம மக்களும் ஆண்டுதோறும் முறை வைத்து, மாற்றி மாற்றி பராமரித்து வழிபட்டு வந்ததாகவும் இந்நிலையில், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருவிழா தொடர்பாக இரு கிராம மக்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் தகராறைத் தொடர்ந்து, 5 ஐம்பொன் சிலைகளையும் முள்ளங்காடு கிராமத்தினர் கோவிலில் வைத்து பூட்டி வைத்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக புளியங்குடியிருப்பு கிராம மக்கள் தொடர்ந்த வழக்கில், ஐம்பொன் சிலைகளை முள்ளங்காடு கிராமத்தினர் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
மேலும், சிலைகளை ஒப்படைப்பதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் எதுவும் நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்படவில்லை என புளியங்குடியிருப்பு கிராம மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சிலைகளை எடுத்துச் செல்வது தொடர்பாக இரு கிராம மக்களிடையே நேற்று தேவகோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்த நிலையில், இன்று காலை தேவகோட்டை கோட்டாட்சியர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புடன் முள்ளங்காடு கிராமத்திற்கு சென்றனர்.
அங்கு கோவிலில் பூட்டி வைக்கப்பட்டிருந்த 5 ஐம்பொன் சிலைகளும் மீட்கப்பட்டு, புளியங்குடியிருப்பு கிராம மக்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதுகுறித்து முள்ளங்காடு கிராம மக்கள் சிலைகளை இந்து சமய அறநிலைத்துறை வசம் ஒப்படைக்கப்படும் என்று கூறி எடுத்துச் சென்று புளியங்குடி கிராம மக்களிடையே ஒப்படைத்துள்ளதாகவும் அதிகாரிகளிடம் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளோம் கால அவகாசம் வேண்டும் என்று கேட்டும் அவர்கள் தரவில்லை என்று தெரிவித்தனர்
புளியங்குடி முள்ளங்காடு ஆகிய இரு கிராமங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?
மொத்த வாக்குகள்: 0
மேலும் படிக்க
🗞 மற்ற செய்திகள்(17)
மாவட்ட செய்திதேவகோட்டையில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
13 அக்டோபர், 2026
மாவட்ட செய்திபள்ளத்தூர் வாரச்சந்தையை வியாபாரிகளுக்கு உடனே வழங்கக் கோரி பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு
13 அக்டோபர், 2026
மாவட்ட செய்திஆழ்கடலில் 5 சதவீதம் மட்டுமே ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் நீலப்பொருளாதார ஆராய்ச்சியில் கூடுதல் கவனம் தேவை *கோவா தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சுனில்குமார் வேண்டுகோள்
7 அக்டோபர், 2026
மாவட்ட செய்திடாக்டர் உமையாள் ராமநாதன் 98-வது பிறந்தநாள் விழா
6 அக்டோபர், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் பிரபல துணிக்கடை முன்பு ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு
5 அக்டோபர், 2026
மாவட்ட செய்திதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் டோக்கன் கிடைத்தும் ஆதார் சிக்கலால் தங்க மோதிரம் கிடையாது என திருப்பி அனுப்பிய மருத்துவமனை நிர்வாகம் பச்சிளம் குழந்தையுடன் மகிழ்ச்சியாக காத்திருந்த பெண் ஏமாற்றம்.
3 அக்டோபர், 2026
மாவட்ட செய்திபொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாளுடன் சுற்றித்திரிந்த நபர் கைது
2 அக்டோபர், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் சமரச தீர்வு மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு
1 அக்டோபர், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் உணவுப்படி வழங்க வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தபோராட்டம்
1 அக்டோபர், 2026
மாவட்ட செய்திபள்ளத்தூர் அருகே ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் – டிரைவர் தப்பியோட்டம்
28 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திதலைமை தேர்தல் ஆணையர் பதவி நீக்க வலியுறுத்தி காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
28 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் ஆபியார் தின விழா
28 செப்டம்பர், 2026
மாவட்ட செய்தி"வாக்காளர் நீக்கத் தந்திரம், மின்சார துறையில் தனியார்மயம், போலி அரசியல் அணுகுமுறை": மத்திய - மாநில அரசுகள் மீது CPM மாநிலச் செயலாளர் சண்முகம் கடும் தாக்கு!
26 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திசிக்ரியில் பார்வையாளர் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்டுபிடிப்புகளை பார்வையிட்ட மாணவர்கள்
26 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திதேவகோட்டையில் டிஎஸ்பி தலைமையில் ரோந்து பணி
25 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை அருகே மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு போலீசார் விசாரணை
25 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திகாலை உணவு திட்டம் விரிவாக்கம்
22 செப்டம்பர், 2026


